(இக்கட்டுரை 17-8-2014 அன்றைய ‘தமிழ்த் தந்தி’ வாரப் பத்திரிகையில் பிரசுரமாகியுள்ளது.)
அதிகரித்துச் செல்லும் வாழ்க்கைச் செலவுக்கு எதிராகவும், அத்தியாவசியப் பொருட்களின்
விலைகளைக் குறைக்கமாறும் கோரி கடந்த
செவ்வாய்க்கிழமை (12-8-2014) கோட்டை
புகையிரத நிலையத்திற்கு முன்பாக
உரிமைகளுக்கான பெண்கள் அமைப்பு
ஆர்ப்பாட்டம் மற்றும் பேரணி ஒன்றை
நடத்தியது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பெண்கள்,
தாய்மார்கள் ,
பல்கலைக்கழக
மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
அத்துடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் வீதி நாடகம் ஒன்றையும் நடத்தினர்.










