Tuesday, August 30, 2011

நோன்புப் பெருநாள் தினத்தில் ரமழான் கற்றுத் தந்த போதனைகளை நினைப்போம்


புண்ணியம் பொழிந்த மாதம் எம்மை விட்டு பிரிந்து விட்டது. கண்ணியமிகு மாதம் எம்மை விட்டு அகன்று விட்டது.
ஆம்! இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றான புனித நோன்பை ஒரு மாத காலம் நோற்று விட்டு ஷவ்வால் மாத தலைப்பிறையைக் கண்டு இன்று நாங்கள் நோன்புப் பெருநாளைக் கொண்டாடுகிறோம்.

Monday, August 1, 2011

​( நோன்பு தொடர்பாக நான் எழுதிய இக் கட்டுரை 1-8-2011 வீரகேசரி பத்திரிகையில் பிரசுரமாகியுள்ளது. )
புனித ரமழான் நோன்பை நோற்று இறை திருப்தியை பெறுவோம்
"நம்பிக்கை கொண்டவர்களே! உங்களுக்கு முன்பிருந்தவர்கள் மீது நோன்பு கடமையாக்கப்பட்டது போன்று உங்கள் மீதும் நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் நீங்கள் "தக்வா' (இறையச்சம்) உள்ளவர்களாகலாம்'' (சூரத்துல் பக்கரா)

ஆம்! உலக முஸ்லிம்களின் வாழ்வில் மீண்டும் ஒரு முறை புனித ரமழான் வந்திருக்கிறது. அமல்கள் கோடி புரிய அரிய வாய்ப்பு கிடைத்திருக்கிறது. ஆம், எமது வாழ்வில் மீண்டும் ஒரு முறை ஆன்மிக வசந்தம் வீச ரமழான் மாதம் பிறந்திருக்கிறது.