Saturday, December 24, 2011

பட்டாசு தயாரிப்பும் கிம்புலாபிட்டிய கிராமமும்


    - கலாநெஞ்சன் ஷாஜஹான் B.Ed  


  நத்தார் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக மக்கள் தயாராகி வருகின்றனர்.

புத்தாண்டு என்றாலே பட்டாசு வகைள் எமது ஞாபகத்திற்கு வரும்.தமிழ் சிங்கள புத்தாண்டுக் கொண்டாட்டத்தைப் போன்று நத்தார் மற்றும் ஜனவரி புத்தாண்டு கொண்டாட்டங்;களின் போதும் பட்டாசுகளுக்கு தனியிடம் உண்டு.

Saturday, December 10, 2011

ஞாபக மறதியும் நினைவாற்றலும்

-          கலாநெஞ்சன் ஷாஜஹான் B.Ed 


இன்றைய அவசர யுகத்தில் ஞாபக மறதி என்பது பெரும் பிரச்சினையாகவே உள்ளது. சிலருக்கு ஞாபக மறதி அதிகமாக இருக்கும். இன்னும் சிலருக்கு ஓரளவு ஞாபக மறதி இருக்கும்.

ஞாபக மறதியை நோய் என்றும் சிலர் கூறுவர். அது போல் நினைவாற்றலை ஒரு கலை என்றும் கூறுவர்.

ஞாபக மறதி காரணமாக இழப்புக்களும் பின்னடைவுகளும், அசௌகரியங்களும், எதிர் மறையான விடயங்களும் ஏற்படும் சந்தர்ப்பங்கள் உண்டு. இருந்த போதிலும் ஞாபக மறதி காரணமாகவே

Friday, December 9, 2011

மதுபானம் மற்றும் புகைத்தல் பழக்க வழக்கங்களிலிருந்து விடுபடுவோம்

-கலாநெஞ்சன் ஷாஜஹான் B.Ed

புகைத்தல் மற்றும் மதுபான பழக்க வழக்கங்களினால் ஏற்படும் தீங்குகள் ஏராளம்.

இவை மனித ஆரோக்கியத்தை பாதிப்பதுடன் பரந்துபட்ட சமூக மட்டத்திலும் அதிகளவு பாதிப்புக்களை ஏற்படுத்தும் அத்துடன் மனிதனின் பொருளாதாரத்திலும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றது.

மேற்கத்தேய கலாசாரத்தின் உள்வாங்கலே புகைத்தல், மதுபான பழக்க வழக்கங்கள் என்பனவாகும்.

Thursday, December 8, 2011

பக்கற்றுக்களில் அடைத்துவிற்பனை செய்யப்படும் ஐஸ்கிறீம் வகைகள் தொடர்பில் கவனம்செலுத்துவோம்

      

       - கலாநெஞ்சன் ஷாஜஹான் B.Ed


எல்லோருக்கும் மிகவும் பிடித்த ஒன்றுதான் ஐஸ்கிறீம். குறிப்பாக சிறுவர்கள் மிகவும் விரும்பி சாப்பிடும் உணவு வகைகளில் ஒன்றாக ஐஸ்கிறீம் உள்ளது. உணவின் பின் டெஸர்ட் ஆகவும் பலரும் ஐஸ்கிறீம் சாப்பிடும் பழக்கத்தை கொண்டுள்ளனர்.

அந்த ஐஸ்கிறீம் சாப்பிடுவதற்கும் தற்போது எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆம் விற்பனை நிலையங்களில் பிளாஸ்ரிக் பக்கட்டுக்களில் அடைத்து விற்பனை செய்யப்படும்

Monday, December 5, 2011

கோபத்தை தவிர்த்து சுகதேகியாக வாழ்வோம்

-கலாநெஞ்சன் ஷாஜஹான்  B.Ed ,  (Email. mzshajahan@gmail.com)



அவசர யுகத்தில் நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். விடிந்தது முதல் இரவு தூங்கும் வரை பலர் பரபரப்பான வாழ்க்கையே வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில், வாழ்க்கைப் போராட்டத்தின் மத்தியில் தவிக்கும் பெரும்பாலானவர்கள்  கோபப்படுவதும் அதிகரித்தே காணப்படுகிறது.

மனித உணர்ச்சிகளின் ஒன்றுதான் கோபம் என்ற உணர்வு வெளிப்பாடாகும். கோபம் நல்ல விளைவுளை ஏற்படுத்துவதில்லை. கோபத்தை அடக்கத் தெரிந்தவனே உண்மையான  
     பலசாலியாவான் என்று கூறப்படுகிறது.

Tuesday, August 30, 2011

நோன்புப் பெருநாள் தினத்தில் ரமழான் கற்றுத் தந்த போதனைகளை நினைப்போம்


புண்ணியம் பொழிந்த மாதம் எம்மை விட்டு பிரிந்து விட்டது. கண்ணியமிகு மாதம் எம்மை விட்டு அகன்று விட்டது.
ஆம்! இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றான புனித நோன்பை ஒரு மாத காலம் நோற்று விட்டு ஷவ்வால் மாத தலைப்பிறையைக் கண்டு இன்று நாங்கள் நோன்புப் பெருநாளைக் கொண்டாடுகிறோம்.

Monday, August 1, 2011

​( நோன்பு தொடர்பாக நான் எழுதிய இக் கட்டுரை 1-8-2011 வீரகேசரி பத்திரிகையில் பிரசுரமாகியுள்ளது. )
புனித ரமழான் நோன்பை நோற்று இறை திருப்தியை பெறுவோம்
"நம்பிக்கை கொண்டவர்களே! உங்களுக்கு முன்பிருந்தவர்கள் மீது நோன்பு கடமையாக்கப்பட்டது போன்று உங்கள் மீதும் நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் நீங்கள் "தக்வா' (இறையச்சம்) உள்ளவர்களாகலாம்'' (சூரத்துல் பக்கரா)

ஆம்! உலக முஸ்லிம்களின் வாழ்வில் மீண்டும் ஒரு முறை புனித ரமழான் வந்திருக்கிறது. அமல்கள் கோடி புரிய அரிய வாய்ப்பு கிடைத்திருக்கிறது. ஆம், எமது வாழ்வில் மீண்டும் ஒரு முறை ஆன்மிக வசந்தம் வீச ரமழான் மாதம் பிறந்திருக்கிறது.

Thursday, February 17, 2011

நபிபெருமானார் ஜனன தினத்தையிட்டு 16-2-2011 அன்று வீரகேசரி பத்திரிகையில் நான் எழுதிய கட்டுரை