Saturday, March 15, 2014

மேல் மாகாண சபை தேர்தலும் சிறுபான்மை பிரதிநிதித்துவமும் - - எம்.இஸட். ஷாஜஹான்

(இக்கட்டுரை 16-3-2014 அன்றைய ‘தமிழ்த் தந்தி’ பத்திரிகையில் பிரசுரமாகியுள்ளது)

எதிர்வரும் மாகாண சபை தேர்தல் சிறுபான்மை  மக்களுக்கு முக்கிய தேர்தலாக உள்ளது. குறிப்பாக மேல் மாகாண சபை தேர்தல்  தமிழ் முஸ்லிம் மக்களுக்கு  முக்கியமானதொரு தேர்தலாக அமைந்துள்ளது.
இது என்ன மாகாண சபை தேர்தல்தானே. பாராளுமன்ற தேர்தல் அல்லவே என சிறுபான்மை  மக்கள் கருதுவார்களாயின் அல்லது யார் ஆட்சி அமைத்தால் நமக்கென்ன என்று தேர்தலில் வாக்களிக்காமல் விடுவார்களாயின், அது சிறுபான்மை மக்களை பாதிக்கும் என்பது

Thursday, March 13, 2014

அரசில் இருந்து விலகுமா முஸ்லிம் காங்கிரஸ்? -எம்.இஸட்.ஷாஜஹான்

(9-3-2014 அன்றைய 'தமிழ்த் தந்திபத்திரிகையில் பிசுரமானது)

 முஸ்லிம் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் சம்பந்தமான அறிக்கை ஒன்றினை ஜெனீவா மனித உரிமை ஆணைக் குழுவிடம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்  கொடுத்துள்ள விடயம்  தொடர்பாக கடந்த வாரம் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ முஸ்லிம் காங்கிரஸ்  தலைவரும் அமைச்சருமான ரஹுப் ஹக்கீமுடன் கடும் தொனியில் கதைத்ததாக செய்திகள் வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
'உங்களால் ஆளும் கட்சியில் இருக்க முடியும் என்றால் இருங்கள் . இல்லையேல் விலகிச் செல்லுங்கள்என்று ஜனாதிபதி ரஹுப்

Saturday, March 1, 2014

தேர்தலுக்கு சவாலாக அமையும் வன்முறைகள் - எம்.இஸட்.ஷாஜஹான்

(2-3-2014 அன்றைய ‘தமிழ்த் தந்தி’ பத்திரிகையில் பிசுரமானது)
மேல்  மற்றும் தென் மாகாண சபை தேர்தல்  பிரசார நடவடிக்கைகள் நாளுக்கு நாள் சூடு பிடித்து வருகிறது. கடந்த திங்கட்கிழமை வரை (24-2-2014) தேர்தல் சட்ட மீறல் மற்றும் தேர்தல் வன்முறைகள் குறித்து 354 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதென கபே இயக்கம் தெரிவித்துள்ளது.
தேர்தல் சட்ட விதிகள் மீறப்பட்டமை குறித்து 338 முறைப்பாடுகளும் தேர்தல் வன்முறைகள் குறித்து 16 முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளதென  தேர்தல் கண்காணிப்பு அமைப்பான கபே இயக்கம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.