Saturday, October 12, 2013

புனித ஹஐ் பெருநாள்

13-10-2013 'தமிழ்த் தந்தி' வாரப் பத்திரிகையில் புனித ஹஐ் பெருநாளையிட்டு (16-10-2013) எனது கட்டுரை பிரசுரமாகியுள்ளது.



Sunday, September 29, 2013

வயம்ப தேர்தல் களம் ஒரு பார்வை

 
எம்.இஸட்.ஷாஜஹான் B.Ed                            


எல்லோரும் எதிர்பார்த்தபடி நடந்து முடிந்த வடமேல் மாகாண சபைக்கான தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு அமோக வெற்றி பெற்றிருக்கிறது.
இந்த மாகாணத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு 34 ஆசனங்களையும் ஐக்கிய தேசிய கட்சி 12 ஆசனங்களையும் ஜனநாயக கட்சி மூன்று ஆசனங்களையும் ஸ்ரீPலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இரண்டு ஆசனங்களையும் மக்கள் விடுதலை முன்னணி ஒரு ஆசனத்தையும்

Sunday, August 18, 2013

'சர்வதேசம் வரை சென்ற பள்ளிவாசல் தாக்குதலும் தொடர்ந்து எழுந்த எதிரொலிகளும் கண்டனங்களும்’



கிராண்ட்பாஸ் பள்ளிவாசல் தாக்குதல் சம்பவமானது முஸ்லிம்களிடத்தில் ஒற்றுமை ஏற்பட வேண்டியதன் அவசியத்தை மீண்டும் வலியுத்தி நிற்கிறது.

ஹலால் விவகாரம் , அபாயா விவகாரம் , பள்ளிவாசல் தொடர்பான பிரச்சினைகள் என தொடர்கதையாக இருக்கும் முஸ்லிம்களுக்கு எதிரான பேரினவாதிகளின் அடக்குமுறைகளை  வெற்றி கொள்ளக் கூடிய ஒரே ஆயுதம் முஸ்லிம்கள் கட்சி பேதங்கள், பிரதேச பேதங்கள், ஜமாஅத் பிரிவு பேதங்களை மறந்து ஒற்றுமையெனும்

Wednesday, August 7, 2013

ரமழானின் போதனைகளை நாளும் கடைப்பிடிப்போம்

('ஈ­ழானின் போத­னை­களை நாளும் கடைப்­பி­டிப்போம்' எனும் தலைப்பில் நான் எழுதிய கட்டுரை இன்றைய (8-8-2013) வீரகேசரி பத்திரிகையில் பிரசுரமாகியுள்ளது)

  


அல்லாஹ் தஆலாவின் அருளினால் இன்று நாங்கள் நோன்புப் பெருநாளைக் கொண்டாடும் பாக்கியம் கிடைத்திருக்கிறது.

ஆம்! இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றான புனித நோன்பை ஒரு மாத காலம் நோற்று விட்டு 'ஷவ்வால்மாத தலைப்பிறையைக் கண்டு இன்று நாங்கள் நோன்புப் பெருநாளைக் கொண்டாடுகிறோம்.

முஸ்லிம்களின் முதல் பெருநாளும் முக்கிய பெருநாளுமாகிய 'ஈதுல் பித்ர்நோன்புப் பெருநாள் சமத்துவத்தை,  சகோதரத்துவத்தை, சாந்தியை, சமாதானத்தை ஏற்படுத்தும் உன்னத நாளாக விளங்குகிறது.

Sunday, July 28, 2013

புனித ரமழானில் மறைந்திருக்கும் தீர்ப்புக்குரிய 'லைலத்துல் கத்ர்' இரவு

புனித ரமழானின் மூன்றாவது பகுதி இன்னும் இரண்டு தினங்களில் (செவ்வாய்க்கிழமை) ஆரமபமாகிறது. ரமழானில் மறைந்திருக்கும் தீர்ப்புக்குரிய 'லைலத்துல் கத்ர்' இரவு மூன்றாவது பகுதியில் மறைந்திருக்கிறது.

ரமழானின் கடைசிப் பத்து தினங்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தினங்களாகும். இத்தினங்களில் ஒற்றைப்பட இரவுகள் ஒன்றில் 'லைலத்துல் கத்ர்' இரவு மறைத்து

Friday, May 24, 2013

' பிரைவேட் பஸ்" (சிறுகதை)


     
    கலாநெஞ்சன் ஷாஜஹான்

'பஞ்சிகாவத்த...மருதான.... டவுன் ஹோல் .... பம்பலப்பிட்டிய...நகின்ட... நகின்ட...'
நோன்ஸ்டப்' ஆக ஒலிக்கும் அந்;த தனியார் பஸ் நடத்துனனின் குரல் ஆமர் வீதியெங்கும் ஒலித்துக் கொண்டிருக்கிறது.

நான் அவசரமாக ஓடிச் சென்று பஸ்ஸினுள் ஏற முயன்று, பாதி வெற்றியும் மீதி தோல்வியுமாய் சுவரில் எறியப்பட்ட பந்தாக மீண்டும் வெளியே வந்து விழப்போய் ஒருவாறு என்னை பஸ்ஸினுள் நுழைத்துக்கொள்கிறேன்.

Wednesday, March 20, 2013

முஸ்லிம் பெண்களின் 'அபாயாவும்' பேரினவாதிகளின் எச்சரிக்கை மணியும்


 -    கலாநெஞ்சன் ஷாஜஹான்  B.Ed        

இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக திட்டமிட்ட முறையில் நடத்தப்பட்டு வரும் தொடர்ச்சி;யான விடயங்கள் முஸ்லிம்களுக்கு அதிர்ச்சியையும் வேதனையையும் அளித்து வரும் நிலையில் முஸ்லிம் பெண்களின் அபாயா தொடர்பில் அடுத்த எச்சரிக்கை மணிகள்  தொடர்ச்சியாக  அடிக்கப்பட்டு வருகின்றன.

Friday, March 15, 2013

எயிட்ஸ் நோயும் அறிந்திருக்க வேண்டிய சில விடயங்களும்



-   கலாநெஞ்சன் ஷாஜஹான்  B.Ed
  

எயிட்ஸ் (AIDS) என்ற சொல்லை கேட்டாலேயே எல்லோருக்கும் அச்சம்
ஏற்படும். இந்நோய் உலகை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் பயங்கர ஆட்கொல்லி நோயாகும்.

உலகின் பல நாடுகளிலும் எச்.ஐ.வி. வைரஸ் தொற்றுக்கு ஆளான பல இலட்சம் பேர் வாழ்ந்து வருகிறார்கள். உலகில் தினமும் பல ஆயிரக்கணக்கானோர எச்.ஐ.வி. வைரஸ் தொற்றுக்கு ஆளாகிறார்கள்.

'சிறுவர் பாலியல் துஷ்பிரயோகமும் கவனத்திற் கொள்ளப்பட வேண்டிய விடயங்களும்'



- கலாநெஞ்சன் ஷாஜஹான் 
  
இலங்கையில் சிறுவர் பாலியல் துஷ்பிரயோக சம்பவங்கள் நாளுக்கு நாள்  அதிகரித்து வரும் அதிர்ச்சி  தகவல்கள்  வெளிவந்து  கொண்டே  இருக்கின்றன.

சிறுவர்கள் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்படல், வல்லுறவுக்குட்படுத்தப்பட்ட  பின்னர்  கொலை செய்யப்படல், அச்சுறுத்தப்படல் மற்றும்  சிறுவர் உரிமைகள் பல்வேறு  வகைகளிலும்  மீறப்படல் என்று  கவலை தரும் விடயங்கள் தொடர்கதையாக  வெளிவந்து கொண்டிருக்கின்றன.