Wednesday, December 14, 2016

ரமழானின் போதனைகளை தொடர்ந்து பேணுவோம்

(06-07-2016 அன்று   இக்கட்டுரை வீரகேசரியில் பிரசுரமானது.)

புண்ணியம் பொழிந்த மாதம் எம்மை விட்டு பிரிந்து விட்டது. கண்ணியமிகு மாதம் எம்மைவிட்டு அகன்று விட்டது. புனித ரமாழான் மாதத்திற்கு விடை கொடுத்துவிட்டு அல்லாஹ் தஆலாவின் அருளினால் இன்று நாங்கள் நோன்புப் பெருநாளைக் கொண்டாடும் பாக்கியத்தைப் பெற்றிருக்கிறோம்.
ஆம்! இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றான புனித நோன்பை ஒரு மாத காலம் நோற்று விட்டு 'ஷவ்வால்' மாத தலைப்பிறையைக் கண்டு இன்று நாங்கள் நோன்புப் பெருநாளைக் கொண்டாடுகிறோம்.
முஸ்லிம்கள் கொண்டாடும் இரு பிரதான பெருநாட்களில் முதல் பெருநாள் நோன்புப் பெருநாளாகும். 'ஈதுல் பித்ர்' எனும்  இந்தப் புனிதப் பெருநாள் சமத்தவத்தை, சகோதரத்துவத்தை, சாந்தியை, சமாதானத்தை ஏற்படுத்தும் உன்னத பெருநாளாக விளங்குகிறது. இறைவனின் நேசத்தை

உலகம் போற்றும் சமாதானத் தூதர் முஹம்மத் நபி

(12-12-2016 அன்று   இக்கட்டுரை வீரகேசரியில் பிரசுரமானது.)


உலகம் போற்றிப் புகழும் உத்தமத் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களின் ஜனன தினத்தை உலகம் பூராவும் உள்ள முஸ்லிம்கள் இன்று (12-12-2016) கொண்டாடுகின்றனர்.
நபியவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட மக்களுக்கு மட்டும் தூதராக அனுப்பப்படவில்லை. உலகில் பிறக்கின்ற சகல மக்களுக்கும் நேர் வழிக்காட்டக் கூடிய தூதராக ஏக இறைவனால் அவர்கள் அனுப்பப்பட்டார்கள்.
ரஸ்ய தத்துவ மேதை டால்ஸ்டாய் என்பவர் மனிதனை  எடைபோடும் அளவுகோல் ஒன்றிருப்பின் அது முஹம்மது  (ஸல்) அவர்களாகத்தான் இருப்பார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.
அல்குர்ஆன் பின்வருமாறு கூறுகிறது
(நபியே) நிச்சயமாக நீர் மிக உயர்ந்த மகத்தான நற்குணம் உடையவராக இருக்கின்றீர் (அல்குர்ஆன் 68:4)
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பரிபூரண மனிதராக உலகில் வாழ்ந்து காட்டினார்கள். அவர்களது சொல், செயல்கள் யாவும் மனித வாழ்க்கைக்கு வழிகாட்டிகளாகும்.