Monday, July 28, 2014

புனித நோன்பின் போதனைகளை தொடர்ந்து பின்பற்றுவோம் - எம். இஸட். ஷாஜஹான்

(இக்கட்டுரை (28-7-2014) அன்றைய வீரகேசரி பத்திரிகையில் பிரசுரமாகியுள்ளது.)

புண்ணியம் பொழிந்த கண்ணியமிகு மாதம் மாதம் எம்மை விட்டு பிரிந்து விட்டது. ரமழான் மாதம் முழுதும் நோன்பு நோற்கும் பாக்கியம் கிடைத்த எமக்கு  அல்லாஹ்வின் அருளினால்; நோன்புப் பெருநாளைக் கொண்டாடும் பாக்கியம் கிடைத்திருக்கிறது.
இறை பள்ளிவாசல்களில் தக்பீர் முழக்கம் ஒலிக்கிறது. ஆம்! இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றான புனித நோன்பை 'ரமழானில்' நோற்று விட்டு 'ஷவ்வால்' மாத தலைப்பிறையைக் கண்டு இன்று (நாளை) நாங்கள் நோன்புப் பெருநாளைக் கொண்டாடுகிறோம்.

பூஸா முகாமில் வாடும் புகலிடக் கோரிக்கையாளர்கள் - தேச நேசன்

(இக்கட்டுரை  20-7-2014 அன்றைய ‘தமிழ்த் தந்தி’  வாரப் பத்திரிகையில் பிரசுரமாகியுள்ளது.)
இலங்கையைச் சேர்ந்த அகதிகள் சட்ட விரோதமான முறையில் படகுகள் மூலமாக அவுஸ்திரேலியாவுக்கு செல்வது பற்றி நாங்கள் அறிந்துள்ளோம். இவர்கள் பயணிக்கும் படகுகள் நடுக்கடலில் கவிழ்ந்து அல்லது பழுதடைந்து  பலர் பரிதாபகரமாக உயிரிழப்பதையும் ஊடகங்களில் செய்திகளாக  பார்க்கிறோம். பலர் தாய்நாட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
 கடந்த பல மாத காலமாக  அவுஸ்திரேலியாவுக்கு புகலிடம் கோரி செல்வது குறைந்திருந்த நிலையில் கடந்த ஜுன் மாத இறுதியிலும் ஜுலை மாத ஆரம்பத்திலும் இரண்டு படகுகளில்  பெரும் எண்ணிக்கையான புகலிடக் கோரிக்கையாளர்கள் கிறிஸ்மஸ் தீவை அண்மித்தனர். இதில் ஒரு படகில் அதில் 37 சிங்களவர்களும்

முஸ்லிம் வாக்காளர்கள் தீர்க்கமான முடிவுகளை எடுக்க வேண்டும் - தேச நேசன்

(இக்கட்டுரை  27-7-2014 அன்றைய ‘தமிழ்த் தந்தி’  வாரப் பத்திரிகையில் பிரசுரமாகியுள்ளது.)

மாகாணசபை முறைமையை ஒழித்து அந்த அதிகாரங்களையும் தங்கள் கைக்குள் எடுத்துக்கொள்ள நினைக்கும் அரசுடன் ஒட்டிக்கொண்டு முஸ்லிம்கள் அரசியல் செய்வது முறையற்றது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை நேரடியாகக் குற்றஞ்சாட்டியுள்ளார்.  முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகம் ஹசன் அலி முன்பாகவே இந்தக் கேள்வியை அவர் எழுப்பியுள்ளார்.
அதேபோன்று, பொது பலசேனா உட்பட பேரினவாத அமைப்புக்கள்,; மற்றும் பிரதான எதிர் கட்சிகளைச் சேரந்தவர்கள் உட்பட பல்வேறு அரசியல்வாதிகளும் முஸ்லிம் காங்கிரஸையும் அந்த கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீமையும் தொடர்ந்து  விமர்சித்து வருகின்றனர்.

ஹக்கீமின் அரசியல் சாணக்கியம் என்பது அரசியல் அடைக்கலமா? - தேச நேசன்

(இக்கட்டுரை  13-7-2014 அன்றைய ‘தமிழ்த் தந்தி’  வாரப் பத்திரிகையில் பிரசுரமாகியுள்ளது.)

'இன வன்முறையில் ஈடுபட்டவர்கள் அரசாங்கத்தினால் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்பதற்கான எந்த சமிக்ஞைகளையும் நான் சற்றும் காணவில்லை. அவர்களை தொடுவதற்கே இவர்கள் அச்சப்படுகிறார்கள். அவர்களை சீண்டினால் இன்னும் ஆபத்து ஏற்படும் என்ற நிலையில்தான் ஜனாதிபதியும் பாதுகாப்புச் செயலாளரும் இருக்கிறார்கள். ஆனால், தராதரம் பார்க்காமல் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். அப்போதுதான் இந்த நாட்டில் நடைபெறுவது உண்மையான சட்ட ஆட்சி என்பதை நிலை நிறுத்த முடியும்.' இவ்வாறு கூறியிருப்பது யார் தெரியுமா? ஏதிர்கட்சி  தலைவர்களில் ஒருவரோ அல்லது ஏதிர்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களில் ஒருவரோ அல்ல.

கலவரங்களின் விசாரணை நீதியாக இடம்பெற வேண்டும் - தேச நேசன்

 (இக்கட்டுரை  6-7-2014 அன்றைய ‘தமிழ்த் தந்தி’  வாரப் பத்திரிகையில் பிரசுரமாகியுள்ளது.) 

சிங்களத்தில் இவ்வாறு கூறுவார்கள். 'நடுத் ஆமுதுருவன்;கே. படுத் ஆமுதுருவன்;கே' 'வழக்கும் நீதிபதியுடையது. பொருட்களும் நீதிபதியுடையது' என்பது அதன் அர்த்தமாகும்.  அளுத்கமை வன்முறைச் சம்பவத்தை  பொலிஸாரும் புலனாய்வுப் பிரிவினரும் விசாரிப்பது அது போன்றதுதான்.
ஆம், கடந்த ஜுன் மாதம் 15 ஆம் திகதி அளுத்கம, பேருவளை, தர்கா நகர், வெலிப்பிட்டிய பிரதேசங்களில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவம் தொடர்பான விசாரணையை பொலிஸாரும்

குற்றவாளிகள் தண்டிக்கப்படுவது எப்போது? - தேச நேசன்

(இக்கட்டுரை  29-6-2014 அன்றைய ‘தமிழ்த் தந்தி’  வாரப் பத்திரிகையில் பிரசுரமாகியுள்ளது.)

சர்வதேச ரீதியில் இலங்கை அரசாங்கத்தின் மீது  மனித உரிமை மீறல்கள் தொடர்பாக குற்றச்சாட்டுக்கள் தெரிவிக்கப்பட்டு விசாரணைக் குழு நியமிக்கப்பட்டிருக்கும் வேளையில், முஸ்லிம் மக்களுக்கு எதிராக அளுத்கம, தர்கா நகர் மற்றும் பேருவளை ஆகிய பகுதிகளில் வன்முறைகள் பிரயோகிக்கப்பட்டு அநீதி  இழைக்கப்பட்டுள்ளது.
நாட்டில் வாழும் சிறுபான்மை மக்கள் அரசாங்கத்தின் மீது நம்பிக்கை இழந்தவர்களாக காணப்படுகின்றனர். தமிழ் மக்களுக்கு 1983 ஜுலை மாதத்தில்  இடம் பெற்ற வன்செயல்கள் மூலமாக  ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சி காலத்தில் அநீதி இழைக்கப்பட்டதைப் போன்று, முஸ்லிம்