Friday, February 21, 2014

மேல் மாகாண சபை தேர்தலும் சிறுபான்மை கட்சிகளும் - எம்.இஸட்.ஷாஜஹான்


('தமிழ்த் தந்தி' பத்திரிகையில் 16-2-2014 அன்று பிரசுரமானது)

எதிர்வரும் மார்ச்  மாதம் நடைறெவுள்ள மேல் மாகாண சபை தேர்தல்  சிறுபான்மை இனங்களைச் சேர்ந்தவர்களுக்கும் சிறுபான்மை கட்சிகளுக்கும் முக்கியமான தேர்தலாக உள்ளது.
இரு பிரதான கட்சிகள் உட்பட பல கட்சிகளும் சுயேட்சைக் குழுக்களும் சிறுபான்மை மக்களின் வாக்குகளை  குறிவைத்து வேட்பாளர்களை களமிறக்கியுள்ளன. அத்துடன் சிறுபான்மை மக்களின் வாக்குகளை சிதறடிக்கும் திட்டத்தையும் அமுல்படுத்தியுள்ளன.
 இம்முறை அதிக எண்ணிக்கையான முஸ்லிம் வேட்பாளர்கள்  களமிறங்கியுள்ளனர். சுயேட்சைக் குழுக்களிலும் முஸ்லிம்> தமிழ்

Friday, February 14, 2014

இனவாதிகள் - அரசாங்கம் - முஸ்லிம் தலைமைத்துவங்கள் - கலாநெஞ்சன்


('தமிழ்த் தந்தி' பத்திரிகையில் 2-2-2014 அன்று பிரசுரமானது)

இலங்கையை முஸ்லிம் காலணித்துவமாக்கும் சதித்திட்டத்தை முறியடிக்கும் போராட்டத்தை கைவிடப் போவதில்லை என்று பொதுபலசேனாவின் செயலாளர் கலகொட அத்தே ஞானசிறி தேரர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், வை.எம்.எம்.ஏ.அமைப்பு, உலமா சபை, முஸ்லிம் அமைப்புகள் தொடர்பாக பாரிய சந்தேகங்கள இருப்பதாகவும், கிழக்கில் சூ10ட்சுமமான முறையில் முஸ்லிம் அடிப்படைவாத சக்திகள் இயங்கி கொண்டிருப்பதோடு அதன் பின்னணியில் சர்வதேச முஸ்லிம் அடிப்படைவாதச் சக்திகள் இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்

Thursday, February 13, 2014

மேல்,தென் மாகாண சபை தேர்தலும் மக்களின் பார்வையும் - தேச நேசன்

('தமிழ்த் தந்தி' பத்திரிகையில் 2-2-2014 அன்று பிரசுரமானது)

மேல் மற்றும் தென் மாகாண சபைகளுக்கான தேர்தல் மார்ச் மாத இறுதியில் நடைபெறவுள்ளது. பிரதான கட்சிகள் உட்பட தேர்தலில் போட்டியிடவுள்ள கட்சிகளும் சுயேட்சைக் குழுக்களும்தமது வேட்பாளர்களை தெரிவு செய்வதில் மும்முரமாக ஈடுபட்டுள்ளன.
பொதுத் தேர்தல்  ஒன்றில் போட்டியிடுவது போல் பிரதான கட்சிகள் இரண்டும் இந்த தேர்தலுக்கு  தயாராவது போன்று தெரிகிறது.

சூடுபிடிக்கும் மேல் மற்றும் தென் மாகாண சபைக் களங்கள் - தேசநேசன்

'தமிழ்த் தந்தி' பத்திரிகையில் 9-2-2014 அன்று பிரசுரமானது)
மேல் மற்றும் தென்மாகாண சபைகளுக்கான தேர்தல் மார்ச் மாதம் 29ஆம் திகதி சனிக்கிழமை நடைபெறவுள்ளவுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் அறிவித்துள்ளார்.
இதனை அடுத்து இலங்கையின்  தேர்தல் வரலாற்றில் மேலும் இரு மாகாணங்களுக்கான தேர்தல் பெரும் எதிர்ப்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற இருக்கிறது.
மேல் மற்றும் தென் மகாண சபைகளில் 155 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ள நிலையில் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்கள் சார்பில் 3ஆயிரத்து 794 வேட்பாளர்கள் தேர்தல் களத்தில்