Monday, June 25, 2018

ஓய்வு பெற்ற ஆசிரியர்களை கௌரவித்த கொழும்பு ஹமீத் அல் ஹுசைனி கல்லூரியின் (PEARLS OF HAMEEDIA) பழைய மாணவர்கள் (PHOTOS)


கொழும்பு ஹமீத் அல் ஹுசைனி கல்லூரியில் 1982 ஆம் ஆண்டில் கல்வி கற்ற  பழைய மாணவர் குழுவினர் (PEARLS OF HAMEEDIA)  தமக்கு கல்வி கற்பித்த அதிபர் மற்றும் ஆசிரியர்களையும் பாடசாலைக்கு பல்வேறு வகையிலும் உதவி புரியும் பழைய மாணவர்களையும் விருது வழங்கி கௌரவித்தனர்.
 23-6-2018 சனிக்கிழமை அன்று நீர்கொழும்பு ரிச்வின் விளா (Richvin Villa)   இல்லத்தில் இடம்பெற்ற PEARLS OF HAMEEDIA பழைய மாணவர் குழுவின் ஒன்றுகூடல் மற்றும் இரவு விருந்து  நிகழ்வில் ஆசிரியர் கௌரவிப்பு நிகழ்வு இடம்பெற்றது. இந்நிகழ்வில்  கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஜீபுர் ரஹ்மான் விசேட அதிதியாக கலந்து சிறப்பித்தார்.

Thursday, June 14, 2018

ஆன்மீக இன்பத்தை தந்த புனித ரமழான்


(வீரகேசரி பத்திரிகையில் நோன்புப் பெருநாள்  சிறப்பிதழில் 15-6-2018 அன்று பிரசுரமான கட்டுரை)

- எம். இஸட். ஷாஜஹான் 

ஒரு மாத காலம் ஆத்மீக இன்பத்தை தந்து அருள் மழை பொழிந்த புனித ரமழான் மாதம் நேற்றோடு எமை விட்டு பிரிந்து விட்டது. இன்று நாங்கள் புனித நோன்புப் பெருநாளை பெரு உவகையோடு கொண்டாடுகிறோம்.
இறைவனின் நேசத்தை பெறுவதற்காக தடுக்கப்பட்ட சகல காரியங்களிலிருந்தும் தவிர்ந்து நடந்து, நல்லமல்கள் பல புரிந்து, முஸ்லிம்கள் ஒவ்வொருவரும் தம்மையே புடம்போட்டுக் கொண்டு இன்று இந்த மகத்துவம் மிக்க பெருநாளை கொண்டாடுகின்றோம்.
இறை பள்ளிவாசல்களில் 'தக்பீர்' முழக்கம் ஓங்கி ஒலிக்கிறது. இறையடியார்களின் உள்ளத்தில் உவகை பெருக்கெடுத்தோடுகிறது. அனைவரும் அதிகாலையில் எழுந்திருந்து, குளித்து புத்தாடையணிந்து,

அருள்மிகு புனித ரமழான் மாதம் உதித்துவிட்டது



 (புனித ரமழான் நோன்பு ஆரம்ப தினம் அன்று 17-5-2018 பிரசுரமான கட்டுரை)

எம். இஸட். ஷாஜஹான் 

'நம்பிக்கை கொண்டவர்களே! உங்களுக்கு முன்பிருந்தவர்கள் மீது நோன்பு கடமையாக்கப்பட்டது போன்று உங்கள் மீதும் நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் நீங்கள் 'தக்வா' (இறையச்சம்) உள்ளவர்களாகலாம்

                       (சூரத்துல் பக்கரா)

ஆம்! முஸ்லிம்கள் ஆவலோடு எதிர்ப்பார்திருந்த புனித ரமழான் மாதம் மீண்டும் ஒருமுறை எமை நாடி வந்திருக்கிறது. பாவக்கறைகளை அகற்றும் மாதம் பிறந்திருக்கிறது. புண்ணியம், பொழியும் கண்ணியமிகு இனிய ரமழான் மலர்ந்திருக்கிறது. நன்மைகள்; கோடி புரிய அரிய வாய்ப்பு கிடைத்திருக்கிறது. எமது வாழ்வில் மீண்டும் ஒரு முறை ஆன்மிக வசந்தம் வீச இனிய ரமழான் மாதம் பிறந்திருக்கிறது.