(இக்கட்டுரை 10-8-2014 அன்றைய ‘தமிழ்த் தந்தி’ பத்திரிகையில் பிரசுரமாகியுள்ளது)
படகுகள் மூலமாக அவுஸ்திரேலியாவுக்கு செல்லும் இலங்கையைச் சேர்ந்த அகதிகள்; அந்நாட்டு அதிகாரிகளால் கைது
செய்யப்பட்டு தாய் நாட்டுக்கு திருப்பி அனுப்பப்டுவது பற்றி அடிக்கடி ஊடகங்கள்
ஊடாக அறிந்து கொள்கிறோம்.
கடந்த வாரம் முதல் அது போன்ற நடவடிக்கை இலங்கையிலும் ஆரம்பித்து வைக்கப்பட்டது. ஆம்!
இலங்கையில் தங்கியிருந்தபடி ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான முகவர் நிறுவனத்தின் ஊடாக
வெளிநாடுகளுக்கு புகலிடம் கோரிய
பாகிஸ்தானியர்கள் சிலர் கடந்த
வெள்ளிக்கிழமை (1-8-2014) குடிவரவு குடியகழ்வு
அதிகாரிகளால் தமது தாய் நாட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்டனர்.
நீர்கொழும்பின்; பல பிரதேசங்களிலிருந்தும்
கடந்த ஜுன் மாதம் 9 ஆம் திகதி முதல் கைது
செய்ப்பட்டு பூஸாவில் உள்ள பயங்கரவாத விசாரணைப் பிரிவு தடுப்பு முகாமில் தடுத்து
வைக்கப்பட்ட பாகிஸ்தான் நாட்டுப் பிரஜைகள்
ஒன்பது பேரே இவ்வாறு தமது தாய் நாட்டுக்கு கட்டுநாயக்கா விமான நிலையத்தி;னூடாக திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
அன்று
வெள்ளிக்கிழமை 10 பாகிஸ்தானியர்கள் திருப்பி
அனுப்படவிருந்தனர். இவர்களில் 8 பேர் அஹ்மதி முஸ்லிம்களாவர்.
இருவர் கிறிஸ்தவர்களாவர். அஹ்மதி முஸ்லிம்களில் ஏழு பேர் திருமணமாகாத
இளைஞர்களாவர். ஒருவர் திருமணமாகி குடும்பத்துடன் இலங்கை வந்தவராவார். திருமணமான
நபரை தவிர்த்து ஏனையோரும் இரு கிறிஸ்த்தவர்களுமே அன்று திருப்பி
அனுப்பப்பட்டுள்ளனர். திருமணமான அந்த பாகிஸ்தான் பிரஜையும் அவரது மனைவியும் பிள்ளையும் சில தினங்களின் பின்னர்; திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
அந்த பாகிஸ்தானியர்கள் திருப்பி அனுப்பப்பட்ட பின்னர்,; கடந்த சனிக்கிழமை (2-8-2014) முதல் மீண்டும்
நீர்கொழும்பில் கைதுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதேபோன்று, ஒவ்வொரு நாளும் பத்து பாகிஸ்தானியர்கள் வீதம் தமது நாட்டுக்கு விமானம் மூலமாக
திருப்பி அனுப்பப்பட்டு வருவதாக தெரிய வருகிறது. இந்த பத்தி எழுதப்படும் தினம் வரை
40 பாகிஸ்தானியர்கள் வரை
திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் ஒன்று தெரிவிக்கிறது.
பாகிஸ்தானைச் சேர்ந்த அஹ்மதி முஸ்லிம்கள், ஷியா முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் மற்றும்
ஆப்கானிஸ்தான், நாட்டைச் சேர்ந்தவர்கள் 1500 இற்கும் மேற்பட்டோர் நீர்கொழும்பு நகரத்தின் பல்வேறு பிரதேசங்களிலும்;; தங்கியிருந்தபடி ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான முகவர் நிறுவனத்தின் ஊடாக
ஐரோப்பிய நாடுகளுக்கு தஞ்சம் கோரியுள்ளனர். இவர்கள் கட்டுநாயக்கா விமான
நிலையத்தையடைந்து அங்கு 'வருகை விசாவை' பெற்றுள்ளவர்களாவர்.
இந்நிலையில், இந்த புகலிடக் கோரிக்கையாளர்களில் 200 இற்கும் மேற்பட்டோர் கடந்த ஜுன்
மாதம் 9 ஆம் திகதி முதல் கைது
செய்யப்பட்டு பூஸா முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இது வரை 214 பாகிஸ்தானியர்களை இலங்கை அரசாங்;கம் கைது செய்துள்ளதாக ஐக்கிய
நாடுகள் அகதிகளுக்கான முகவர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இவ்வாறு கைது செய்யப்பட்டு பூஸா தடுப்பு முகாமில் தடுத்து
வைக்கப்பட்டுள்ளவர்களே கட்டம் கட்டமாக
தமது தாய் நாட்டுககு திருப்பி அனுப்பட்டு வருகின்றனர்.
இதேவேளை, புகலிடம் கோரும் பாகிஸ்தானியர்களை இலங்கை அரசாங்கம்
சட்டவிரோதமாக நாடு கடத்துவதாக ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான முகவர் நிறுவனம்
சுட்டிக்காட்டியுள்ளது. சர்வதேச சட்டத்தின் அடிபடையில் புகலிடக் கோரி;க்கையாளர்களை நாடு கடத்துவது தடை செய்யப்பட்ட விடயமாகும் எனவும்,
இந்த நடவடிக்கையை
அரசாங்கம் கைவிட வேண்டும் எனவும் இந்நிறுவனம் கோரியுள்ளது. சித்திரவதைகளுக்கு
எதிரான சர்வதேச பிரகடனத்தின் அடிப்படையில் பலவந்தமான முறையில் புகலிடக் கோரி;க்கையாளர்களை சொந்த நாட்டுக்கு அனுப்பி வைக்க முடியாது என இந்நிறுவனம் மேலும்
சுட்டிக்காட்டியுள்ளது.
இதேவேளை, அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான முகவர் நிறுவனம்; புகலிடக் கோரிக்கையாளர்களின் புகலிடக் கோரிக்கை மனுவை விசாரிப்பதில்
ஏற்பட்டுள்ள காலதாமதமே இலங்கையில் அவர்கள் பல மாத காலமாக தங்கியிருக்க வேண்டிய
நிலை ஏற்பட்டுள்ளதாக புகலிடக் கோரிக்கையாளர்களால் குற்றச்சாட்டு
தெரிவிக்கப்படுகிறது.
உயிரச்சுறுத்தலுக்குப் பயந்து தஞ்சம் கோரியிருந்தவர்களை
திருப்பி அனுப்புவது சட்ட விதிகளுக்கு முரணானது என்று ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான
முகவர் நிறுவனம் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், புகலிடக் கோரிக்கையாளர்களான பாகிஸ்தானியர்கள் தொடர்ந்தும் திருப்பி
அனுப்பப்பட்டு வருகின்றமையையே அவதானிக்க முடிகிறது.
இது தொடர்பாக முஸ்லிம் அரசியல்வாதிகளோ அல்லது ஏனைய அரசியல்வாதிகளோ அல்லது
எதிர்கட்சியைச் சேர்ந்தவர்களோ இதுவரை எந்தவித கருத்தையும் தெரிவிப்பதை காணவில்லை.
நாட்டில் பொது மக்கள் பொருளாதார அகதிகளாக வாழும் நிலையில்,
மக்கள் புகலிடம் கோரி
வெளிநாடுகளுக்கு செல்கின்ற நிலையில், மனித உரிமைகள் பல
மீறப்படுகின்ற நிலையில் எமது நாட்டுக்கு வருகின்றவர்கள் பற்றி அவர்கள் அக்கறை கொள்ளாமல் இருக்கலாம்.
பாகிஸ்தானிலிருந்து எமது நாட்டுக்கு வந்து வெளிநாடுகளில் புகலிடம் கோருபவர்கள் கடந்த
பத்து வருடங்களுக்கு மேலாகவே இங்கு
வருகிறார்கள். இவ்வாறு வந்தவர்களில் பலரது
புகலிடக் கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டு அவர்கள் வெளிநாடுகளுக்கு
சென்றுள்ளார்கள். இன்னும் சிலரது புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு அவர்கள் தாய் நாட்டுக்கு திருப்பி
அனுப்பப்பட்டுள்ளார்கள். இது தொடர்ச்சியாக நடைப்பெற்று வரும் விடயமாகும்.
இவ்வாறு புகலிடம் கோரி வருபவர்களால் பல்வேறு சமூகப் பிரச்சினை ஏற்பட்டுள்ளதாகவும்,
நாட்டுக்கு அதிக
செலவினம் ஏற்படுவதாகவும் குற்றச்சாட்டு
தெரிவிக்கபபடுகிறது.
பத்து வருடங்களுக்கு மேலாக எமது நாட்டுக்கு வருகின்ற சிறிய
எண்ணிக்கை கொண்ட புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு எதிராக திடீரென்று அரசாங்கம்
நடவடிக்கை எடுத்துள்ளதன் காரணம்;,
மேற்படி
குற்றச்சாட்டுக்களுக்கு மேலாக சர்வதேச
அரசியல் காரணிகளே உள்ளதாக அவதானிகள் தெரிவிக்கின்றனர். இந்தியாவையும்
பாகிஸ்தானையும் திருப்திப்படுத்துவதற்காகவும்,
அரசாங்கத்திற்கு
ஐக்கிய நாடுகள் சபையின் மேல் உள்ள
கோபத்தின் காரணமாகவுமே புகலிடக் கோரிக்கையாளர்கள் திருப்பி அனுப்பப்படுவதன் முக்கிய காரணம் என அரசியல்
அவதானிகள் தெரிவிக்கின்றனர்.
எமது நாட்டில் மனித உரிமைகள் மீறப்படுவதாகவும். உயிர் அச்சுறுத்தல் மற்றும் துன்புறுத்தல்களுக்கு ஆளாவதாகவும் கூறி
வெளிநாடுகளுக்கு புலம் பெயர்ந்தவர்கள், தஞ்சம் கோரிச் சென்றவர்கள்
இலட்சக்கணக்கானவர்களாவர.; அதேபோன்று இறுதி யுத்தம்
நிலவிய காலப் பகுதியில் பல ஆயிரக்கணக்கான பொது மக்கள் கொன்றொழிக்கப்பட்டுள்ளார்கள்
எனவும்,
யுத்த சட்டங்கள்
மீறப்பட்டுள்ளன எனவும் குற்றச்சாட்டுக்கள்
தெரிவிக்கப்பட்டு எமது நாட்டுக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையினால் விசாரணையும்
ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், எமது நாட்டுக்கு வந்து தங்கியிருந்து வெளிநாடுகளுக்கு புகலிடம் கோரியுள்ள அயல்
நாட்டவர்களை தமது தாய் நாட்டுக்கு திருப்பி அனுப்புவது எமது நாட்டிற்கு மேலும் அவப்பெயரையே
ஏற்படுத்தும் என்ற அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
எமது நாட்டுக்கு வெளிநாட்டவர்கள் வந்து தங்கியிருந்து வேறு
நாடுகளுக்கு தஞ்சம் கோருவது எமது நாடு தொடர்பாக அவர்கள் வைத்துள்ள நற்பெயர்
காரணமாகவும், பாதுகாப்பாக தங்கியிருப்பதற்கு பொருத்தமான நாடு
என்பதனாலாகும் என்பதையும் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது.அத்தடன் அவர்கள் இங்கு
தற்காலிகமாகவே தங்கியுள்ளனர்.
பாகிஸ்தானில் இருந்து புகலிடம் கோரி இங்கு
வந்துள்ளவர்களில் அஹ்மதி முஸ்லிம்களே
அதிகமாவார். பாகிஸ்தானில் வாழும் அஹ்மதிகளுக்கு அந்த நாட்டின் அரசாங்கமும் சுன்னி
முஸ்லிம்களும் கொடுமைகளை செய்து வருகின்றனர். அநீதிகளை இழைத்து வருகின்றனர். பல
நூற்றுக் கணக்கானோர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். பல நூற்றுக் கணக்கானோர்; கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். பலர் படுகாயப்படுத்தப்பட்டு
அங்கவீனமாக உள்ளனர். அந்த நாட்டில் அஹ்மதியா முஸ்லிம் ஜமாஅத்தைச் சேர்ந்தவர்கள்
ஏனைய முஸ்லிம்களுக்கு எதிராக பொலிஸ்
நிலையத்தில் முறைப்பாடு செய்ய முடியாது. அந்த முறைப்பாடு பொலிஸ் நிலையத்தில்
ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.
அஹ்மதியா ஜமாஅத்தைச் சேர்ந்தவர்களை கொலை செய்தால் அந்த
கொலையாளிகள் கைது செய்யப்படுவதில்லை. இவ்வாறு அஹ்மதிகளுக்கெதிரான மனித உரிமை
மீறல்கள் மிக அதிகமாகும்.
அத்துடன், 1974 ஆம் ஆண்டில் அப்போதைய
பாகிஸ்தான் பிரதம மந்திரி துல்பி;கார் அலி பூட்டோ
பாராளுமன்றத்தில் சட்;டம் இயற்றி பாகிஸ்தானில்
வசிக்கும் அஹ்மதி முஸ்லிம்களை முஸ்லிம்கள் அல்லாத சிறுபான்மையினர் என்று
பிரகடனப்படுத்தினார். இதனை மேலும் வலுப்படுத்தும் வகையில் அப்போதைய ஜனாதிபதி
ஜெனரல் ஷியா ஹுல் - ஹக் 1984 ஆம் ஆண்டில் அரசியல்
அமைப்பில் சில திருத்தங்களை செய்து அஹ்;மதிகளுக்கெதிராக சட்டங்களை
கொண்டு வந்தார்.
இந்நிலையில்
பல்வேறு கொடுமைகளுக்கு ஆளாகி வரும் பாகிஸ்தானிய அஹ்மதி முஸ்லிம்கள் தொடர்பில்
இலங்கை ஊடகங்களில் பெரும்பாலும் செய்திகள்
வெளி வருவதில்லை.
அஹ்மதியா ஜமாஅத் முஸ்லிம்கள் மட்டுமல்லாமல் அங்கு
சிறுபான்மையினராக வாழும் ஷியா பிரிவைச்
சேர்ந்த முஸ்லிம்களும் , அங்கு சிறுபான்மையினராக வசிக்கும் கிறிஸ்தவ மக்களும் பல்வேறு கொடுமைகளுக்கு ஆளாவதன் காரணமாகவே
இலங்கைக்கு வந்து தஞ்சம் கோரிக்கை விடுக்கின்றனர்.
இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ள அப்பாவி மக்களை கைது செய்து பூஸா
முகாமில் தடுத்து வைப்பதும், நாடு கடத்துவதும் மிகப்
பெரும் மனித உரிமை மீறல்களாகும் எனவும,; அவர்கள் தாய் நாட்டுக்கு திருப்பி
அனுப்பப்படுகையில் அங்கு பாதிக்கப்படலாம் எனவும் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.
தற்போது
பாகிஸ்தானிலிருந்து இலங்கை வருவோருக்கு
எமது விமான நிலையத்தில் வழங்கப்படும் 'வருகை விசா' நிறுத்தப்பட்டுள்ளது.
புகலிடம் கோரி வருவோர் மாத்திரமல்லாமல் வர்த்தக நோக்கில் வருவோரின் எண்ணிக்கையும்
குறைந்துள்ளதாக அறிய முடிகிறது.
புகலிடக் கோரிக்கையாளர்களை
கைது செய்வதையும்; நாட்டுக்கு திருப்பி
அனுப்புவதையும் நிறுத்தி தங்களை மனிதாபிமான நோக்கில் நடத்த வேண்டும் என்று பாதிக்கப்பட்டுள்;ள பாகிஸ்தானியர்கள் அரசாங்கத்திடம்
வேண்டுகோள் விடுக்கின்றனர.;
No comments:
Post a Comment