(18-6-2015 அன்றைய வீரகேசரி பத்திரிகையில் பிரசுரமான
எனது கட்டுரை.)
'நம்பிக்கை கொண்டவர்களே!
உங்களுக்கு முன்பிருந்தவர்கள் மீது நோன்பு கடமையாக்கப்பட்டது போன்று உங்கள் மீதும்
நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் நீங்கள் 'தக்வா' (இறையச்சம்) உள்ளவர்களாகலாம்
(சூரத்துல் பக்கரா)
ஆம்! புனித ரமழான் மாதம் மீண்டும் ஒருமுறை எமை நாடி
வந்திருக்கிறது. பாவக்கறை அகற்றும் மாதம் பிறந்திருக்கிறது. புண்ணியம்,
பொழியும் கண்ணியமிகு
இனிய ரமழான் மலர்ந்திருக்கிறது. அமல்கள் கோடி புரிய அரிய வாய்ப்பு
கிடைத்திருக்கிறது. எமது வாழ்வில் மீண்டும் ஒரு முறை ஆன்மிக வசந்தம் வீச உலக வாழ்
முஸ்லிம்களுக்கு இனிய ரமழான் மாதம் பிறந்திருக்கிறது.
இறை திருப்தியே மனித வாழ்க்கையின் ஒரே இலக்காகும். அந்த இறை
திருப்தியும் பொருத்தமும் தூய்மையான உள்ளத்துடன் வரும் மனிதர்களுக்குத்தான்
கிடைக்கும். ஏக இறைவனிடம் கிடைக்கும் அந்த உளத் தூய்மையை எம்மிடத்தில் ஏற்படுத்தவே
சங்கைமிகு மாதம் உதித்திருக்கிறது.