(06-07-2016 அன்று இக்கட்டுரை வீரகேசரியில்
பிரசுரமானது.)
புண்ணியம்
பொழிந்த மாதம் எம்மை விட்டு பிரிந்து விட்டது. கண்ணியமிகு மாதம் எம்மைவிட்டு அகன்று
விட்டது. புனித ரமாழான் மாதத்திற்கு விடை கொடுத்துவிட்டு அல்லாஹ் தஆலாவின் அருளினால்
இன்று நாங்கள் நோன்புப் பெருநாளைக் கொண்டாடும் பாக்கியத்தைப் பெற்றிருக்கிறோம்.
ஆம்!
இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றான புனித நோன்பை ஒரு மாத காலம் நோற்று விட்டு
'ஷவ்வால்' மாத தலைப்பிறையைக் கண்டு இன்று நாங்கள் நோன்புப் பெருநாளைக் கொண்டாடுகிறோம்.
முஸ்லிம்கள்
கொண்டாடும் இரு பிரதான பெருநாட்களில் முதல் பெருநாள் நோன்புப் பெருநாளாகும். 'ஈதுல்
பித்ர்' எனும் இந்தப் புனிதப் பெருநாள் சமத்தவத்தை,
சகோதரத்துவத்தை, சாந்தியை, சமாதானத்தை ஏற்படுத்தும் உன்னத பெருநாளாக விளங்குகிறது.
இறைவனின் நேசத்தை