புண்ணியம் பொழிந்த கண்ணியமிகு மாதம் மாதம் எம்மை விட்டு
பிரிந்து விட்டது. ரமழான் மாதம் முழுதும் நோன்பு நோற்கும் பாக்கியம் கிடைத்த
எமக்கு அல்லாஹ்வின் அருளினால்; நோன்புப் பெருநாளைக்
கொண்டாடும் பாக்கியம் கிடைத்திருக்கிறது.
இறை பள்ளிவாசல்களில் தக்பீர் முழக்கம் ஒலிக்கிறது. ஆம்!
இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றான புனித நோன்பை 'ரமழானில்' நோற்று விட்டு 'ஷவ்வால்' மாத தலைப்பிறையைக் கண்டு
இன்று (நாளை) நாங்கள் நோன்புப் பெருநாளைக் கொண்டாடுகிறோம்.