Monday, July 28, 2014

முஸ்லிம் வாக்காளர்கள் தீர்க்கமான முடிவுகளை எடுக்க வேண்டும் - தேச நேசன்

(இக்கட்டுரை  27-7-2014 அன்றைய ‘தமிழ்த் தந்தி’  வாரப் பத்திரிகையில் பிரசுரமாகியுள்ளது.)

மாகாணசபை முறைமையை ஒழித்து அந்த அதிகாரங்களையும் தங்கள் கைக்குள் எடுத்துக்கொள்ள நினைக்கும் அரசுடன் ஒட்டிக்கொண்டு முஸ்லிம்கள் அரசியல் செய்வது முறையற்றது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை நேரடியாகக் குற்றஞ்சாட்டியுள்ளார்.  முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகம் ஹசன் அலி முன்பாகவே இந்தக் கேள்வியை அவர் எழுப்பியுள்ளார்.
அதேபோன்று, பொது பலசேனா உட்பட பேரினவாத அமைப்புக்கள்,; மற்றும் பிரதான எதிர் கட்சிகளைச் சேரந்தவர்கள் உட்பட பல்வேறு அரசியல்வாதிகளும் முஸ்லிம் காங்கிரஸையும் அந்த கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீமையும் தொடர்ந்து  விமர்சித்து வருகின்றனர்.

அளுத்கமை, பேருவளை வன்முறைச் சம்பவத்தின் பின்னர் இது அதிகரித்துள்ளது. ஆயினும் அமைச்சர் ரஹுப் ஹக்கீம் அரசாங்கத்திற்கு ஆதரவு அளித்து வருவதையோ அல்லது அமைச்சுப் பதவியை விட்டுவிடவோ தயாராக இல்லை என்பது தெரிகிறது.

அண்மையில் அக்கரைப்பற்றில்; நடைபெற்ற ;இப்தார்;' நிகழ்வில் அமைச்சர் ரஹுப் ஹக்கீம் கலந்து கொண்டு உரையாற்றும் போது தெரிவித்த கருத்து இதனை மேலும் உறுதிப்படுத்துகிறது.

முஸ்லிம் சமூகத்தின் மீது கட்டவிழ்த்துவிடப்படுகின்ற வன்முறைகளைக் கருத்திற்கொண்டு இந்த அரசாங்கத்திலிருந்து முஸ்லிம் காங்கிரஸ் வெளியேற வேண்டும், அமைச்சர் பதவியைத் துறக்க வேண்டும் என்று தனக்கு பல தரப்பிலிருந்தும் எதிர்ப்புகள் கிழம்பியுள்ளதாகவும், அமைச்சுப் பதவிக்கான இடத்தினை சங்கீதக் கதிரை விளையாட்டாகப் பயன்படுத்தினால், தன்;மை அடக்க முயற்சிக்கும் சக்திக்கு தீனி போடும் செயலாக அது மாறிவிடும் எனவும் அமைச்சர்  அங்கு குறிப்பிட்டுள்ளார்.
அதுமாத்திரமன்றி, அமைச்சுப் பதவியிலிருந்து விலகினால் அமெரிக்க ஏகாதிபத்தியம் சொல்வதைப்போல,; அவர் அமைச்சுப் பொறுப்பிலிருந்து  விலகியதாகவும், அமெரிக்காவின் எடுப்பார் கைப்பிள்ளையாக அவர் செயற்படுவதாகவும் கதைகளைப் புனைந்து அப்பாவி சிங்கள கிராம மக்கள் மத்தியில் ஓர் அரசியல் நாடகத்தினை தோற்றுவிக்கும் நிலை ஏற்படும் என்றும் அமைச்சர் ஹக்கீம்  அங்கு கூறியுள்ளார்.

  எதிர்வரும் ஆறு மாத காலப் பகுதிக்குள் நாடு தழுவிய ரீதியில் தேர்தலொன்று இடம்பெறுவதற்கான சாத்தியக் கூறுகள் உள்ளதாகவும்  இக்காலப் பகுதியில் பல்வேறான விடயங்கள் கட்சிகளுக்குள் நிகழலாம் எனவும், அத்தனை விடயங்களையும் நிதானமாக அவதானித்து முஸ்லிம் சமூகத்தின் விமோசனத்துக்காக முஸ்லிம் காங்கிரஸ் தீர்க்கமான முடிவை எடுக்கும் எனவும்,  பொதுபலசேனா காலத்திற்குக் காலம் அமைச்சுக்குள் புகுந்து பல அட்டகாசங்களைப் புரிகின்றன. அதனை இந்த அரசாங்கம் கண்டு கொள்ளாமல் இருக்கின்றது  எனவும் அமைச்சர் அங்கு மேலும் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் ஹக்கீம் அரசாங்கத்தின் மீது குற்றசாட்டுக்கள்  தெரிவித்து வருகின்ற போதிலும,  அரசாங்கத்தை விட்டு விலகத் தயாரில்லை. இதற்கான காரணத்தை அவர் குறிப்பட்டுள்ளார்.
. முஸ்லிம்களின் சொல்லும் செயலும் வேறுபடக் கூடாது. அவர்கள் ஏனைய அரசியல்வாதிகளைப் போன்று நடந்து கொள்ள முடியாது. இந்நிலையில் அமைச்சரின் கருத்துக்களும் அவரது  கட்சியின்  சில செயற்பாடுகளும் முரண்பாடுடையதாகவே  தெரிகிறது.

; மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்கவினால் கடந்த 10 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் பிரேரணை முன் வைக்கப்பட்டது. நாட்டில் சட்டம் ஒழுங்கின் நிலை பற்றிய அந்த பிரேரணையின் போது அளுத்கம, பேருவளை, தர்கா நகர் பகுதிகளில் முஸ்லிம்களின் மீது மேற்கொள்ளப்பட்ட வன் முறைகள் பற்றியும் விவாதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இது தொடர்பான விவாதம் இடம்பெறும் என்று தெரிந்திருந்த போதிலும் அன்றைய தினம் பாராளுமன்றத்தில் உள்ள 18 முஸ்லிம் உறுப்பினர்களில் 16 பேர் விவாதத்தில் கலந்து கொள்ளவில்லை. இருவரே கலந்து கொண்டனர்.
நான்கரை மணி நேரம் இடம்பெற்ற  விவாதத்தில் அளுத்கம, பேருவளை, தர்கா நகர் பகுதிகளில் இடம்பெற்ற சம்பவங்களுக்கு முஸ்லிம்களே காரணம் என்று பேசப்பட்டுள்ளது. இதனை மறுத்துப் பேச அன்று முஸ்லிம் காங்கிரஸ் உட்பட ஏனைய முஸ்லிம் உறுப்பினர்கள் சபையில் இல்லை.  அல்லது இருந்தவர்களும் பேசவில்லை? இது தொடர்பாக அன்றைய உரையில் அனுரகுமார திசாநாயக்கவும் குறிப்பட்டிருந்தார்.

சிங்கள மக்களின் வாக்குகளினால் தெரிவு செய்யப்பட்ட சிங்களவர் ஒருவர் முஸ்லிம் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி தொடர்பாக பேசும் போது, முஸ்லிம் மக்கள் மீது இன்னொரு தரப்பு பலியை போடும் போது, இது தொடர்பாக பேச முஸ்லிம் தலைமைகள்  இல்லாமல் போனது பச்சைத் துரோகமாகும்.

மேடைகளில் பேசும் போதும், அறிக்கைவிடுகின்ற போதிலும், ஊடக நேர் காணல்களின் போதும் தமது சமூகத்திற்காக உயிர், பொருள், ஆவி அத்தனையையும் தியாகம் செய்ய தயாராக இருப்பதாக பறைசாற்றிக் கொள்ளும் அல்லது காட்டிக் கொள்ளும் முஸ்லிம் தலைமைகள் எங்கே போயின அன்று?, வாக்காளப் பெருமக்கள் கேட்கிறார்கள்  இன்று.
முஸ்லிம் சமூகத்தின் விமோசனத்துக்காக முஸ்லிம் காங்கிரஸ் தீர்க்கமான முடிவை எடுக்கும் என்று  அமைச்சர் ஹக்கீம் குறிப்பிட்டுள்ளார். இதுவரை அந்த கட்சி எடுத்த விமோசனம் தந்த முடிவுகள் எவை?. அமைச்சர் எடுக்கும் முடிவுகளினால் அவருக்கும் அவரை சேர்ந்த பலருக்குமே விமோசனம் கிடைத்திருக்கிறது. முஸ்லிம் சமூகத்திற்கு அல்ல என்று குற்றச்சாட்டு தெரிவிக்கப்படுகிறது.

முஸ்லிம் காங்கிரஸிற்கு எதிராக எழுகின்ற குற்றச்சாட்டுக்களை அந்த கட்சியின் முக்கியஸ்த்தர்கள் பலரும் மறைமுகமாகவேனும் ஏற்றுக் கொண்டுள்ளனர். சிலர் கட்சியை விட்டு விலகிச் சென்றுள்ளனர்.
முஸ்லிம் சமூகம் கடந்த இரண்டு வருடங்களாக பலவிதமான துன்பங்களுக்கு ஆளாகிக் கொண்டிருக்கையில் முஸ்லிம் காங்கிரஸ் அரசுடன் தொடர்ந்தும் இணைந்திருந்து சமூகத்திற்கு பெற்றுக் கொடுத்தவை எவை? பேரினவாதிகளால் தமது சமூகத்திற்கு இழைக்கப்படும் அநீதிகளையும்  அடாவடித் தனங்கiளையும் சர்வதேசத்தின் கவனத்;திற்கு  கொண்டு செல்வதற்கு, ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கு தெரியப்படுத்துவதற்கு அல்லது முறையிடுவதற்கு  அமைச்சர் பதவி அவசியமா? அரசுடன் ஒட்டிக் கொணடிருப்பது அவசியமா? ஏன்று பலரும் கேட்கின்றனர். அல்லது முஸ்லிம் காங்கிரஸ் உட்பட ஏனைய முஸ்லிம் கட்சிகள் அரசாங்கத்துடன் இருப்பதன் காரணமாக பேரினவாதிகள் முஸ்லிம் மக்களுக்கு எதிரான தமது திட்டங்களை செயற்படுத்தாமல் விட்டார்களா? அரசாங்கத்தின் பங்காளிகளான முஸ்லிம் கட்சிகள்  அரசாங்கத்திலிருந்து விலகியிருந்தால் முஸ்லிம் மக்களுக்கு எதிரான பேரினவாதிகளின் செயற்பாடுகளுக்கும் அரசாங்கத்தின் பாராமுகத்திற்கும் எதிராக ஆக்கப் பூர்வமான முறையில் குரல் கொடுத்திருக்க முடியும் என்று கட்சியின் ஆதரவாளர்கள்   பலர் தெரிவிக்கின்றனர்.

எதிர்வரும் ஆறு மாத காலப் பகுதிக்குள் நாடு தழுவிய ரீதியில் தேர்தலொன்று இடம்பெறுவதற்கான சாத்தியக் கூறுகள் உள்ளதாகவும்  இக்காலப் பகுதியில் பல்வேறான விடயங்கள் கட்சிகளுக்குள் நிகழலாம் எனவும், அத்தனை விடயங்களையும் நிதானமாக அவதானித்து முஸ்லிம் சமூகத்தின் விமோசனத்துக்காக முஸ்லிம் காங்கிரஸ் தீர்க்கமான முடிவை எடுக்கும் எனவும் அமைச்சர் ஹக்கீம் அக்கரைப்பற்றில்; நடைபெற்ற ;இப்தார்;' நிகழ்வில் கூறியுள்ளதாக ஆரம்பத்தில் குறிப்பிட்டோம்.

ஆறு மாத காலப் பகுதிக்குள் நடைபெறப் போவது பொதுத் தேர்தலாக இருந்தால் என்ன? ஜனாதிபதி தேர்தலாக இருந்தால் என்னஅந்த தேர்தல்களின் போது முஸ்லிம் காங்கிரஸ்  உட்பட ஏனைய முஸ்லிம் கட்சிகள் தீர்க்கமான முடிவுகளை எடுத்தால் என்ன ?; எடுக்காவிட்டால் என்ன? நாட்டிலுள்ள முஸ்லிம்  வாக்காளர்கள் தீர்க்கமான முடிவுகளை எடுப்பார்கள் என்று அரசியல் அவதானிகள் கருதுகின்றனர்.

No comments:

Post a Comment