இலங்கையைச் சேர்ந்த அகதிகள் சட்ட விரோதமான முறையில் படகுகள்
மூலமாக அவுஸ்திரேலியாவுக்கு செல்வது பற்றி நாங்கள் அறிந்துள்ளோம். இவர்கள்
பயணிக்கும் படகுகள் நடுக்கடலில் கவிழ்ந்து அல்லது பழுதடைந்து பலர் பரிதாபகரமாக உயிரிழப்பதையும் ஊடகங்களில்
செய்திகளாக பார்க்கிறோம். பலர்
தாய்நாட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
கடந்த பல மாத
காலமாக அவுஸ்திரேலியாவுக்கு புகலிடம் கோரி
செல்வது குறைந்திருந்த நிலையில் கடந்த ஜுன் மாத இறுதியிலும் ஜுலை மாத
ஆரம்பத்திலும் இரண்டு படகுகளில் பெரும்
எண்ணிக்கையான புகலிடக் கோரிக்கையாளர்கள் கிறிஸ்மஸ் தீவை அண்மித்தனர். இதில் ஒரு
படகில் அதில் 37 சிங்களவர்களும்
4 தமிழர்களுமாக 41 இலங்கை அகதிகள் இருந்துள்ளனர். மற்றைய படகில் 153 அகதிகள் இருந்துள்ளனர். இந்த 153 அகதிகள் பாண்டிச் சேரியிலிருந்து புறப்பட்ட படகிலிருந்தவர்களாவர். இவர்களில் தமிழகத்திலுள்ள இலங்கை அகதிகள் இருந்ததாகவும் தெரிய வருகிறது.
4 தமிழர்களுமாக 41 இலங்கை அகதிகள் இருந்துள்ளனர். மற்றைய படகில் 153 அகதிகள் இருந்துள்ளனர். இந்த 153 அகதிகள் பாண்டிச் சேரியிலிருந்து புறப்பட்ட படகிலிருந்தவர்களாவர். இவர்களில் தமிழகத்திலுள்ள இலங்கை அகதிகள் இருந்ததாகவும் தெரிய வருகிறது.
41 பேரை கொண்ட
படகிலிருந்தவர்கள் இலங்கை கடல் எல்லையில்
வைத்து இலங்கை அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டனர். ஆயினும் 153 அகதிகள் தொடர்பில் சிட்;னி உயர் நீதிமன்றத்தில்
தாக்கல் செய்யப்பட்ட மனுவை அடுத்து,
அந்த இலங்கை புகலிடக்
கோரிக்கையாளர்களை நாடு கடத்துவதற்கு அவுஸ்திரேலிய நீதிமன்றம் தடையுத்தரவை
பிறப்பித்துள்ளது. இது எமது நாட்டு புகலிடக்
கோரிக்கையாளர்களின் அண்மைய தகவல்.
எமது நாட்டவர்கள் வெளிநாடுகளுக்கு தஞ்சம் கோரி செல்கையில்
வெளிநாடுகளில் இருந்து எமது நாட்டுக்குள் வந்து அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் ஆணையத்தின்
ஊடாக இலங்கையில் தங்கியிருந்தபடி வெளிநாடுகளுக்கு தஞ்சம் கோருகின்றவர்கள் பற்றி
அறிந்திருக்கிறீர்களா? அவர்களில் சிலர் கைது செய்யப்பட்டு பூஸா முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை
உங்களுக்குத் தெரியுமா?
வெளிநாடுகளுக்கு தஞ்சம் கோரும்
பாகிஸ்தானியர்களும் ஆப்கானித்தானியர்களும்
பாகிஸ்தானைச் சேர்ந்த அஹ்மதி முஸ்லிம்கள்,
ஷியா முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் மற்றும்
ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர்கள் 1400 இற்கும் மேற்பட்டோர்
நீர்கொழும்பு நகரத்தின் பல்வேறு பிரதேசங்களிலும்;; தங்கியிருந்தபடி அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் ஆணையத்தின் (ருNர்ஊசு) ஊடாக ஐரோப்பிய
நாடுகளுக்கு தஞ்சம் கோரியுள்ளனர். இவர்களில் அஹ்மதியா ஜமாஅத்தைச் சேர்ந்த
(இஸ்லாமிய பரிவு) முஸ்லிம்களின் எண்ணிக்கை 1200 இற்கும் அதிகமாகும்.
இந்த புகலிடக் கோரிக்கையாளர்களே கடந்த ஜுன் மாதம் 9 ஆம் திகதி முதல் கைது
செய்யப்பட்டு பூஸா முகாமில் தடுத்து வைக்கப்பட்டு வருகின்றனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டு பூஸாவில் உள்ள பயங்கரவாத
விசாரணைப் பிரிவு தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பாகிஸ்தானியர்கள்; இலங்கை நாட்டுக்குள் கப்பல்
மூலமாகவோ அல்லது படகுகள் மூலமாகவோ சட்ட விரோதமான முறையில் நுழைந்தவர்கள் அல்ல.
இலங்கை அரசாங்கமே விமான நிலையத்தில் வைத்து வருகை விசாவை இவர்களுக்கு வழங்கியுள்ளது. பின்னர்
அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் ஆணையத்தின் ஊடாக இவர்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு
புகலிடம் கோரி விண்ணப்பித்துள்ளார்கள். தமது புகலிடக் கோரிக்கை விசாரணைக்கு
உட்படுத்தப்பட்டு வரும் நிலையிலேயே இவர்கள் கைது செய்ப்பட்டுள்ளனர். புகலிடக்
கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்படடு அகதி அந்தஸ்து வழங்கப்பட்டு வெளிநாடுகளுக்கு அனுப்படவிருந்த
சிலரும் கைது செய்யப்பட்டவர்களில் உள்ளனர். அவர்களில் மூவர் அண்மையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
இந்த பாகிஸ்தான் முஸ்லிம்கள் சிலரை ஊடகவியலாளர்கள் சிலர்
நீர்கொழும்பு பெரியமுல்லையில் அமைந்துள்ள
மஸ்ஜித் பஸ்ல் அஹ்மதியா முஸ்லிம்
பள்ளிவாசலில்; சந்தித்தோம். அவர்களுடன்
அஹ்மதியா பள்ளிவாசல் முக்கியஸ்தர்கள் இருவர் உடன் இருந்தனர்.
இந்த சந்திப்பின் மூலமாக பாகிஸ்தானிலிருந்து இலங்கை வந்து
அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் ஆணையத்தின்;
மூலமாக
வெளிநாடுகளுக்கு தஞ்சம் கோருவதற்கான
காரணங்களை அறியக் கூடியதாக இருந்தது. அவர்கள் தெரிவித்த கருத்துக்கள் இந்த
பத்தியில் இடம்பெற்றுள்ளன.
தஞ்சம் கோரும் அஹ்மதியா ஜமாஅத் முஸ்லிம்கள்
பாகிஸ்தானிலிருந்து
இலங்கை வந்து அகதிகளுக்காக ஐக்கிய நாடுகளின் ஆணையத்தின் மூலமாக தஞ்சம்
கோரியுள்ளவர்களில் பெரும்பான்மையானவர்கள் அஹ்மதியா முஸ்லிம் ஜமாஅத்தைச்
சேர்ந்தவர்களாவர். அஹ்மதியா முஸ்லிம்கள்;
இறுதிக் காலத்தில்
தோன்றக் கூடிய வாக்களிக்கப்பட்ட மஹ்தியாகவும் மஸீஹ் ஆகவும் (சீர்;த்திருத்தவாதி) ஹஸ்ரத் மிர்ஸா
குலாம் அஹ்மத் அவர்களை ஏற்றுக் கொண்டவர்களாவர்.
இதன் காரணமாக
பாகிஸ்தானில் வாழும் அஹ்மதிகளுக்கு அந்த நாட்டின் அரசாங்கமும் சுன்னி
முஸ்லிம்களும் கொடுமைகளை செய்து வருகின்றனர். அநீதிகளை இழைத்து வருகின்றனர். பல
நூற்றுக் கணக்கானோர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். பல நூற்றுக் கணக்கானோர்; கைது செய்யப்பட்டு சிறையில்
அடைக்கப்பட்டுள்ளனர். பலர் படுகாயப்படுத்தப்பட்டு அங்கவீனமாக உள்ளனர். அந்த
நாட்டில் அஹ்மதியா முஸ்லிம் ஜமாஅத்தைச் சேர்ந்தவர்கள் ஏனைய முஸ்லிம்களுக்கு எதிராக பொலிஸ் நிலையத்தில்
முறைப்பாடு செய்ய முடியாது. அந்த முறைப்பாடு பொலிஸ் நிலையத்தில் ஏற்றுக்
கொள்ளப்படமாட்டாது.
அஹ்மதியா ஜமாஅத்தைச் சேர்ந்தவர்களை கொலை செய்தால் அந்த
கொலையாளிகள் கைது செய்யப்படுவதில்லை. அஹ்மதிகளுக்கெதிரான மனித உரிமை மீறல்கள் மிக
அதிகமாகும்.
1974 ஆம் ஆண்டில் அப்போதைய
பாகிஸ்தான் பிரதம மந்திரி துல்பி;கார் அலி பூட்டோ
பாராளுமன்றத்தில் சட்;டம் இயற்றி பாகிஸ்தானில்
வசிக்கும் அஹ்மதி முஸ்லிம்களை முஸ்லிம்கள் அல்லாத சிறுபான்மையினர் என்று
பிரகடனப்படுத்தினார். இதனை மேலும் வலுப்படுத்தும் வகையில் அப்போதைய ஜனாதிபதி
ஜெனரல் ஷியா ஹுல் - ஹக் 1984 ஆம் ஆண்டில் அரசியல்
அமைப்பில் சில திருத்தங்களை செய்து அஹ்;மதிகளுக்கெதிராக சட்டங்களை
கொண்டு வந்தார்.
இதன்படி. அஹ்மதியா ஜமாஅத்தைச் சேர்ந்தவர்கள் தமது
பள்ளிவாசல்களை 'மஸ்ஜித்' என்று அழைக்கவோ அல்லது பெயர் வைக்கவோ முடியாது. ஒருவர் மீது ஒருவர் 'ஸலாம்'
(அஸ்ஸலாமு அலைக்கும்) கூற முடியாது. அஹ்மதியொருவர் தம்மை முஸ்லிம் என்று குறிப்பிடவோ கூறவோ
முடியாது. குர்ஆனை ஓத முடியாது. 'வணக்கத்திற்குரிய நாயன்
அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இல்லை. முஹம்மது நபியவர்கள் அல்லாஹ்வின்
திருத்தூதராவார்' என்ற அரபு வசனத்தை (லாஹிலாஹ
இல்லல்லாஹு முஹம்மதுர் ரஸுலுல்லாஹி) பள்ளிவாசல்களில் காட்சிப்படுத்த முடியாது.
மொத்தத்தில் முஸ்லிம்கள் செய்யும் எதனையும்
அஹ்மதிகள் செய்ய முடியாது. அவ்வாறு நடந்தால் மூன்றாண்டுகள் வரை சிறைத்
தண்டனை வழங்கப்படும்.
இவ்வாறு அஹ்மதி முஸ்லிம்களுக்கு எதிராக அன்றிலிருந்து இன்று
வரை பல்வேறு கொடுமைகள் இழைக்கப்பட்டு வருகின்றன. அவையாவும் இஸ்லாமிய சட்டத் திட்டதிட்டங்களுக்கு
எதிரானவைகளாகும். அப்பட்டமான மனித உரிமை மீறல்களாகும்.
இந்த கொடுமைகளைத் தாங்க முடியாததன் காரணமாகவே பாகிஸ்தானில்
உள்ள அஹ்மதியா முஸ்லிம்கள் இலங்கை வந்து அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் ஆணையத்தின்
ஊடாக தஞ்சம் கோரி வெளிநாடுகளுக்கு செல்கின்றனர். அங்கு அவர்களுக்கு
குடியுரிமை வழங்கப்படுகிறது.
அஹ்மதியா ஜமாஅத் முஸ்லிம்கள் மட்டுமல்ல அங்கு
சிறுபான்மையினராக வாழும் ஷியா பிரிவைச்
சேர்ந்த முஸ்லிம்களும், அங்கு சிறுபான்மையினராக வசிக்கும் கிறிஸ்தவ மக்களும் பல்வேறு கொடுமைகளுக்கு ஆளாவதன் காரணமாகவே
இலங்கைக்கு வந்து தஞ்சம் கோரிக்கை விடுக்கின்றனர்.
இலங்கை வந்துள்ள
பலரின் உறவினர்கள்;
அங்கு கொலை செய்யப்பட்டுள்ளனர். பலருக்கு மரண அச்சுறுத்தல்
விடுக்கப்பட்டுள்ளது. பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்கள். அரசாங்க
உத்தியோகத்தர்கள், தனியார் தொழிற்துறையில்
ஈடுபடுபவர்கள் என பல தரப்பினரும்
பலிவாங்கல்களுக்கும் அச்சுறுத்தல்களுக்கும் ஆளாக்கப்பட்டுள்ளனர்.
இங்கு வந்துள்ள அனைவரும் தமது வீடுகளையும், காணிகளையும் விற்றுவிட்டு
அல்லது தமது உறவினர்களிடம் ஒப்படைத்துவிட்டு தமது சொந்த விருப்பின் பேரில் இங்கு
புகலிடம் கோரி வந்துள்ளனர். சில இளைஞர்கள்;
பெற்றோர்களைப்
பிரிந்து வந்துள்ளனர். இவர்கள் தமது நாட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்டால் அங்கு
கொலை செய்யப்படக் கூடிய அபாயம் உள்ளது.
இதன் காரணமாகத்தான் இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள
பாகிஸ்தான் புகலிடக் கோரிக்கையாளர்களை திருப்பி அனுப்ப வேண்டாம் என்று
அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் ஆணையம் இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை
விடுத்துள்ளது.
கைதுகளின் காரணம் என்ன?
பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் நாட்டவர்கள்; இலங்கை வந்து அகதிகளுக்காக
ஐக்கிய நாடுகளின் ஆணையத்தின் ஊடாக வெளிநாடொன்றுக்கு அகதி அந்தஸ்த்து பெற்று
செல்வது சில வருட காலமாகவே நடைபெற்று வருகிறது.
ஆயினும,;
கடந்த ஜுன் மாதம்
முதலே இவர்களின் கைதுகள் ஆரம்பமாகியுள்ளன. இவ்வாறு கைது செயயப்பட்டவர்கள் தற்போது
பூஸா முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்களின் எண்ணிக்கை 182 என தெரிய வருகிறது.
இவர்களில் 119 பேர் அஹ்மதி முஸ்லிம்களாவர்.
ஏனையோர் ஷியா முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் ஆப்கானிஸ்தான் நாட்டவர்களாவர்.
வெளிநாடுகளுக்கு புகலிடம் கோரி இலங்கை வந்துள்ள பாகிஸ்தான் மற்றும்
ஆப்கானிஸ்தான் நாட்டவர்கள் திடீரென்று இவ்வாறு கைது செய்யப்படுவதற்கு காரணம் என்ன?
கடந்த மே மாதம் 27 ஆம் திகதி புதுடில்லியில்
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சந்தித்த சமயம்,
இந்தியப் பிரதமர்
தரப்பில் எழுப்பப்பட்ட சில ஆட்சேபணைகளை அடுத்தே,
இலங்கையில் தஞ்சம்
கோரிய நிலையில் தங்கியிருந்த பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் நாட்டவர்கள் கைது
செய்யப்பட்டுள்ளனர் என்று ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சென்னையில் குண்டுத் தாக்கதல்களை நடத்த திட்டமிட்ட பாகிஸ்தான் உளவுப் பிரிவுடன்
தொடர்புடைய கண்டியைச் சேர்ந்த ஒருவர் இந்தியாவில் கைது செய்யப்பட்டார். இந்த
நபரிடம் பல அதிர்ச்சி தரும் செய்திகள் இந்திய தேசிய புலனாய்வுப் பிரிவிற்கு
கிடைத்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டிருந்தன.
பாகிஸ்தான் உளவு அமைப்பும் ,
தீவிரவாத
அமைப்புக்களும் இந்தியாவுக்கு எதிரான தாக்குதல்களை நடத்த இலங்கையை தளமாக
பயன்படுத்த முனைவதாக அந்த
இலங்கையரிடமிருந்து தகவல்கள்
பெறப்பட்டுள்ளதை அடுத்து,
இலங்கைக்கு
இந்தியாவிடமிருந்து கிடைத்த எச்சரிக்கையின் அடிப்படையில் இந்த கைதுகள் இடம்பெறுவதாக கூறப்படுகிறது.
.
அதேபோன்று, பாகிஸ்தானுடன் நெருங்கிய தொடர்பு கொண்டுள்ள இலங்கை அரசு அந்நாட்டவர்கள்
வெளிநாடுகளில் தஞ்சம் கோருவதை தடுத்து உதவுவதற்காகவும்; இந்த கைதுகள் இடம்பெறுகின்றன. அதன் காரணமாகத்தான்
சார்க் நாடுகளில் ஒன்றான பாகிஸ்;தான் நாட்டவர்கள் இங்கு வந்து
விமான நிலையத்தில் வருகை விசா பெறுவதை அரசாங்கம் நிறுத்தியுள்ளது என்று அரசியல் அவதானிகள் கருதுகின்றனர்.
கைது செய்யப்படுபவர்களை நாடு கடத்த அரசு தயாராவதாகவும்
இன்னொரு தகவல் தெரிவிக்கிறது. இந்த கைதுகள் மூலமாக அரசு இந்தியாவை
திருப்திப்படுத்த முனைவதாக அவதானிகள்
தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், பாகிஸ்தானிய புகலிடக்
கோரிக்கையாளர்கள் கைது செய்து தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறித்து எதுவும்
தெரியாது என பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளதாகவும்,
இலங்கையில் புகலிடம்
கோரியுள்ள பாகிஸ்தானியர்களை நாடு கடத்த வேண்டாம் என ஐக்கிய நாடுகள் அமைப்பின்
அகதிகளுக்கான முகவர் நிறுவனம் உத்தியோகபூர்வமாக இலங்கை அரசாங்கத்திடம்
கோரியுள்ளதாகவும் ஊடகங்களில் செய்திகள்
இடம்பெற்றன.
இதேவேளை, பூஸா முகாமில் தடுத்து
வைக்கப்பட்டுள்ள புகலிடக் கோரிக்கையாளர்களை
சந்திப்பதற்கு அகதிகளுக்காக ஐக்கிய நாடுகளின் ஆணையத்திற்கு இலங்கை
அரசாங்கம் இதுவரை அனுமதி வழங்கவில்லை என்று தெரிய வருகிறது.
இதேவேளை,
இலங்கையில்
இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை
மீறல்கள் தொடர்பில் விசாரணை செய்வதற்கு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர்
நாயகம் நவநீதம்பிள்ளை விசாரணைக் குழுவை நியமித்துள்ளமையினால் அரசாங்கத்திற்கும்
ஐக்கிய நாடுகள் சபைக்கும் இடையில் ஏற்பட்டுள்ள முறுகல் நிலையின் எதிரொலியே இந்த
கைது நடவடிக்கை எனவும்
தெரிவிக்கப்படுகிறது.
அஹ்மதியா புகலிடக் கோரிக்கையாளர்கள்
பயங்கரவாதிகள் அல்ல
கைது செய்யப்பட்டு
பூஸா முகாமில் தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ள அஹ்மதியா ஜமாஅத்தைச் சேர்ந்தவர்கள்
தலிபான்களோ அல்லது அல் - கைதா இயக்கத்தைச் சேர்ந்தவர்களோ அல்லது வேறு ஆயுதம்
தாங்கிய இயக்கங்களுடன் தொடர்புடையவர்களோ அல்ல. இலங்கைக்கு போதைப் பொருள் கடத்தி
வந்தவர்களும் அல்லர். தமது சொந்த நாட்டில் பல்வேறு துன்புறுத்தல்களுக்கும்
அநீதிகளுக்கும்; ஆளாகியிருப்பவர்கள். என்று
அஹ்;மதியா முஸ்லிம் ஜமாஅத்தின்
பேச்சாளர்கள் தெரிவிக்கின்றனர்.;
பூஸா தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஒருவரை
அவரது மனைவி மற்றும் பிள்ளைகள் என இருவர்
சந்திக்க அனுமதி உண்டு. அவ்வாறு தடுத்து வைக்கப்பட்டுள்ள அஹ்மதியா ஜமாஅத்தைச்
சேர்ந்த 119 பேரில் 70 பேர் திருமணம் முடிக்காத
இளைஞர்களாவர். இதன் காரணமாக அவர்களை
ஒருவரும் சந்திக்க முடியாதுள்ளது. அவர்கள் பெரும் கவலையுடனும் துன்பத்துடனும்
அங்கு உள்ளனர் என்று அந்த பேச்சாளர்கள் தெரிவிக்கின்றனர்.
பூஸா முகாமின் அனுபவம்
தமக்கு தரம் குறைவான சாப்பாட்;டையே மூன்று வேளையும் வழங்கினார்கள். இரவு பத்து மணிக்கு தாம்
தடுத்து வைக்கப்பட்டிருந்த 'செல்லை' மூடிவிடுவார்கள். அதிகாலை 4.30 மணிக்கு திறப்பார்கள்.
அதுவரை எவரும் தமது இயற்கை கடன்களை நிறைவேற்ற முடியாது. நீரிழிவு நோயாளிகள்,
இதய நோயாளிகள் சிறுநீரகம் பாதிக்கப்பட்ட நோயாளிகள் என சகலருக்கும் பெனடோல் அல்லது தூக்க
மாத்திரைகளையே மருந்தாக வழங்கினார்கள்.'
என்று அகதிகளுக்காக
ஐக்கிய நாடுகளின் ஆணையத்தினூடாக தஞ்சம் கோரிய நிலையில்,
குடிவரவு குடியகல்வு
அதிகாரிகளால் கடந்த ஜுன் மாதம் கைது செய்யப்பட்டு, பூஸா முகாமில் தடுத்து வைக்கப்பட்ட பின்னர் விடுவிக்கப்பட்ட பாகிஸ்தானைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞர் ஒருவர் ஊடகவியலாளரகளிடம் தெரிவித்தார்.
தான் தடுத்து வைக்கப்பட்ட காலப் பகுதியில் ஒரு தடைவை
சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தினர் அங்கு வந்து தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு
சிகிச்சை வழங்கினார்கள் எனவும், அகதிகளுக்கான ஐக்கிய
நாடுகளின் ஆணையத்தினால் தஞ்சக் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டு தனக்கு அகதி அந்தஸ்து
வழங்கப்பட்டுள்ளதன் காரணமாகவே,
தான் பின்னர் விடுதலை
செய்யப்பட்டதாகவும் அந்த இளைஞர் தெரிவித்தார்.
அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ள சகலரும் குறைவான வசதிகளுடன் பெரும்
துன்பத்தின் மத்தியிலேயே அங்கு இருப்பதாக அந்த இளைஞர் மேலும் தெரிவித்தார்.
இலங்கையில் அச்சத்துடன் வாழும் புகலிடக்
கோரிக்கையாளர்கள்
இலங்கை வந்து
அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் ஆணையத்தின்;
(ருNர்ஊசு) ஊடாக தஞ்சம் கோரும்
பாகிஸ்தானியர்கள் மற்றும் ஆப்கானிஸ்தான் நாட்டவர்கள் தற்போது;
அச்சத்தின் மத்தியில்
வாழ்வதாக தெரியவருகிறது. அவர்களுக்கு தற்போது சுதந்திரமாக வெளியில் நடமாட முடியாத
நிலை ஏற்பட்டுள்ளது. கைது செய்யப்படுவோம் என்ற பயமே அதற்கான காரணமாகும்.
'நாங்கள் பாகிஸ்தானில்
மதத்தின் பெயரால்; கொடுமைக்கும் அநீதிகளுக்கும்
ஆளானதன் காரணமாவே இங்கு வந்து
வெளிநாடுகளுக்கு செல்வதற்கு தஞ்சக்;
கோரிக்கை
விடுத்துள்ளோம். ஆனால், இங்கும் எமக்கு அநீதியே
இழைக்கப்படுகிறது' என்று பாகிஸ்தானியர்
ஒருவர் எம்மிடம் தெரிவித்தார்.
தஞ்சம் கோரி வந்தோர் உரிய முறையில் விமான நிலையத்தில் வருகை
விசா பெற்றே வந்துள்ளனர். அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் அலுவலகத்தில் ; அவர்கள் புகலிடம் கோரி
விண்ணப்பித்துள்ளனர். கோரிக்கை விசாரணை
செய்யப்பட்டு ஏற்கப்பட்டாலேயே அவர்களுக்கு அகதிகளுக்கான அந்தஸ்த்து வழங்கப்படும்.
பின்னர் அவர்கள் விரும்புகின்ற ஐரோப்பிய நாடுகளுக்கு அனுப்படும் வரையில,;
மாதம் 16 ஆயிரத்து 500 ரூபா உதவித் தொகை அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின்
ஆணையத்தினால் வழங்கப்படும். புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டால் மேன் முறையீடு
செய்யலாம். இந்த நடைமுறைகளுக்கு பல மாத காலம் எடுக்கும். அகதி அந்தஸ்த்து
வழங்கப்படாதவர்கள் அவர்களது நாட்டுக்கு
திருப்பி அனுப்பப்படுவார்கள். இந்நிலையில், புகலிடக் கோரிக்கை
விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளவர்களே அதிக எண்ணிக்கையில் கைது
செய்யப்பட்டுள்ளனர் என்றும், இந்த ரமழான் நோன்பு மாதத்தில்
அவர்கள் துன்பத்திற்கும் அசௌகரியங்களுக்கும் ஆளாகியுள்ளதாக அஹ்மதியா முஸ்லிம்
ஜமாஅத்தின் பேச்சாளர்கள் இருவரும் தெரிவித்தனர்.
புகலிடம் கோருவோர்
பல நாடுகளில் இருந்தும் புகலிடம் கோருவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அது இன்று சில
நாடுகளுக்கு பெரும் பிரச்சினையாக உள்ளது. தாய் நாட்டில் தமது வாழும் உரிமை உட்பட
ஏனைய மனித உரிமைகள் கடுமையான முறையில் மறுக்கப்படல்,
உயிருக்கு ஆபத்து
ஏற்படல்,
உள் நாட்டு யுத்தம்,
இனக் குழுக்களிடையே
சண்டை போன்ற பல்வேறு காரணங்களினால் புகலிடம் கோருவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள்
அதிகரித்து வருகிறது.
இதனிடையே. நல்ல பொருளாதார வளத்துடன் வாழ வேண்டும்
என்பதற்காகவும் சிலர் புகலிடம் கோரி வெளிநாடுகளுக்கு செல்வதையும்,
இன்னொரு குழுவினர்; இதனை வியாபாரமாக்கி 'புகலிடம் கோருதல்' என்ற பெயரில் சட்ட விரோதமான
முறையில் மக்களை வெளிநாடுகளுக்கு அனுப்பி
ஆட்கடத்தல் செய்வதையும் அறியக் கூடியதாக
உள்ளது. இதன் காரணமாக உண்மையான புகலிடக் கோரிக்கையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்
என்பதை மறுக்க முடியாது.
எமது நாட்டவர்கள் அவுஸ்திரேலியா உட்பட ஐரோப்பிய
நாடுகளுக்கு புகலிடம் கோரி செல்கையில்,
பாகிஸ்தான் மற்றும்
ஆப்கானிஸ்தான் நாட்டவர்கள் எமது நாட்டுக்கு வந்து,
அகதிகளுக்கான ஐக்கிய
நாடுகளின் ஆணையத்தின் ஊடாக புகலிடம் கோரி வெளிநாடுகளுக்கு செல்ல
முயற்சிக்கிறார்கள்.
இப்போது மூன்று நாட்டு புகலிடக் கோரிக்கையாளர்களின்
நிலையும் அபாயகரமாகவே உள்ளது. புகலிடக் கோரிக்கையாளர்களின் மனிதாபிமான
கோரிக்கைகளையும், சர்வதேச சட்டங்களையும் ஒரு
நாடு மதிக்க வேண்டும்.
அவுஸ்திரேலிய அரசு புகலிடக் கோரிக்கையாளர்கள் தொடர்பில் தற்போது கடுமையாக நடந்து கொள்கிறது.
எமது நாடு இனிமேல் எப்படி நடந்து கொள்ளும்?
No comments:
Post a Comment