(இக்கட்டுரை 13-7-2014 அன்றைய
‘தமிழ்த் தந்தி’ வாரப் பத்திரிகையில் பிரசுரமாகியுள்ளது.)
'இன வன்முறையில் ஈடுபட்டவர்கள்
அரசாங்கத்தினால் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்பதற்கான எந்த
சமிக்ஞைகளையும் நான் சற்றும் காணவில்லை. அவர்களை தொடுவதற்கே இவர்கள்
அச்சப்படுகிறார்கள். அவர்களை சீண்டினால் இன்னும் ஆபத்து ஏற்படும் என்ற
நிலையில்தான் ஜனாதிபதியும் பாதுகாப்புச் செயலாளரும் இருக்கிறார்கள். ஆனால், தராதரம் பார்க்காமல் அவர்கள்
தண்டிக்கப்பட வேண்டும். அப்போதுதான் இந்த நாட்டில் நடைபெறுவது உண்மையான சட்ட ஆட்சி
என்பதை நிலை நிறுத்த முடியும்.'
இவ்வாறு கூறியிருப்பது
யார் தெரியுமா? ஏதிர்கட்சி தலைவர்களில் ஒருவரோ அல்லது ஏதிர்கட்சி
பாராளுமன்ற உறுப்பினர்களில் ஒருவரோ அல்ல.
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நீPதி அமைச்சருமான ரவூப்
ஹக்கீம் ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள
நேர்காணல் ஒன்றிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அளுத்கமை,
பேருவளை, தர்கா நகர் போன்ற இடங்களில்
இடம்பெற்ற இன வன்முறை சம்பவங்களைத் தொடர்ந்து நாட்டின் பல பகுதிகளிலும்
முஸ்லிம்களுக்கெதிரான சம்பவங்கள் தொடர்ந்தும் இடம்பெற்று வருவது தொடர்பில்
கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்
கடந்த மூன்று வருடங்களாக பொதுபல சேனாவும் அதனோடு சேர்ந்து
இயங்குகிற ஏனைய அமைப்புகளும் திட்டமிட்டு முஸ்லிம்கள் மீது அபாண்டமான
குற்றச்சாட்டுக்களை கூறிவருகிற நிலையில்,அவர்களுடைய முயற்சிகளை
தடுப்பதற்கன எந்த சட்ட நடவடிக்கையும் எடுக்காது சட்டை செய்து வந்த அரசாங்கம்
நேரடியாக தலையிடுவதற்கு தயக்கம் காட்டுவதென்பது இந்தப் பிரச்சினைகள்
பூதாகரமாகுவதற்கு காரணமாயிருக்கிறது. அண்மையில்,
பதுளையில் நடைபெற்ற
ஜனாதிபதியுடனான சந்திப்பின்போது கூட நடைபெற்ற சம்பவங்களுக்கு முஸ்லிம்களும்
பொறுப்புக் கூற வேண்டும் என்ற பாணியில்தான் ஜனாதிபதி கூறினார்.
அத்தோடு பாதுகாப்பு செயலாளரிடம் இது சம்பந்தமாக நான்
கதைத்தபோது, ஞானசார தேரருக்கு வாய்
சரியில்லை. ஆனால், அவர் பேசுகிற விடயம் சரி
என்று சொல்லுகின்ற அளவுக்குத்தான் எமது பாதுகாப்புச் செயலாளர் இருக்கிறார் என்பது
விசனத்துக்கும் வேதனைக்கும் உரிய விடயம். அத்தோடு இந்த பொதுபல சேனா இயக்கத்தின்
ஓர் அனுதாபியாகவும் தன்னை காட்டிக் கொள்வதில் அவர் தயங்கவில்லை என்பது
எங்களுக்குத் தெளிவாக தெரிகிறது. அதேபோன்று, ஜனாதிபதியும் இதனுடைய
பாரதூரத்தை உணராமல் இருப்பது இன்றிருக்கின்ற மோசமான நிலவரமாக உள்ளது' இவ்வாறு அமைச்சர் ரவூப்
ஹக்கீம் ; அந்த நேர்காணலில் தனது மனக்குமுறலை கொட்டித் தீர்த்திருக்கிறார்.
ஏனையோருக்கு எப்போதோ புரிந்த விடயம் அமைச்சர் ரவூப்
ஹக்கீமுக்கு காலம் கடந்து புரிந்திருக்கிறது. இதற்குத்தான் காலம் கடந்த ஞானம்
என்று கூறுவது. அது சரி! ஞானம் பிறந்ததற்காக
அவர் பதவியை ராஜினமா செய்வார் என்றோ, ஆளும் கூட்டமைப்பிலிருந்து
அவரது கட்சி தமது ஆதரவை விலக்கிக் கொள்ளும் என்றோ கூறமுடியாது.
அடுத்து வரும்
தேர்தலில் மீண்டும் எவ்வாறு ஜனாதிபதியின் கரங்களை பலப்படுத்துவது, அமைச்சுப் பதவிகள், பிரதி அமைச்சர் பதவிகளை
பெற்றுக் கொள்வது என்று அமைச்சர் ரவூப் ஹக்கீம் சிந்தித்து செயற்படுவார் என்றே
பலரதும் விமர்சனமாகும். அவர் அதற்கு அரசியல் சாணக்கியம் என்கிறார். அரசியல்
சாணக்கியத்துடன் செயற்படுவது என்பது அரசியல் அடைக்கலம் பெறுவது அல்ல. அரசியல்
சாணக்கியத்துடன் செயற்படுகிறோம் என்று கூறி எவ்வளவு காலம் தான் எமது சமூகத்தை ஏமாற்ற முடியும்?; 'எத்தனை காலம்தான் ஏமாற்றுவார்
இந்த நாட்டிலே? ' என்ற பழைய பாடல்தான்
ஞாபகத்துக்கு வருகிறது.
அதுசரி. இனி ஊவா மாகாண சபை தேர்தல் நடைபெற இருக்கிறது.
அதனைத் தொடர்ந்து அடுத்த வருடம் மார்ச் மாதமளவில் ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ளது.
முஸ்லிம் காங்கிரஸ் ஆளும் தரப்பிற்கு தொடர்ந்து ஆதரவு அளிக்குமா?, எதிர்கட்சிகளுடன் இணையுமா? என்பதை பார்ப்பதற்கு
சந்தர்ப்பம் வந்துள்ளது.
முஸ்லிம் காங்கிரஸ் அராங்கத்திற்கு தொடர்ந்து ஆதரவு
அளிப்பதன் மூலமாக பௌத்த பேரினவாதிகளிடமிருந்து முஸ்லிம் மக்களுக்கு ஏற்பட்டுள்ள
அச்சுறுத்தல்களை ஒடுக்க முடியுமாக இருந்தால் பரவாயில்லை,
முஸ்லிம் மக்களுக்கு
ஏற்பட்டுள்ள அச்சத்தை போக்க முடியுமாக இருந்தால் பரவாயில்லை. தமது மக்களின்
உரிமைகளை காப்பாற்ற முடியுமாக இருந்தால் பரவாயில்லை என்று பலரும்
சுட்டிக்காட்டுகின்றனர். ஆனால் இவை எவையும் நடைபெறவில்லை.
அடுத்த வருடம்
மார்ச் மாதமளவில் நாட்டில் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கு ஜனாதிபதி மஹிந்த
ராஜபக்ஷ தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக
தெரியவருகின்றது. எதிர்வரும் ஜனவரி மாதம் பாப்பரசர் பிரான்சிஸ் இலங்கைக்கு விஜயம்
மேற்கொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதையடுத்தே தேர்தலை மார்ச் மாதம் நடத்துவதற்கு
அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் ஜெனிவாவில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் மனித
உரிமைப் பேரவையின் 28 ஆவது கூட்டத் தொடரும் அடுத்த
வருடம் ஜனவரி மாதம் நடைபெறவுள்ளது. 28 ஆவது கூட்டத் தொடரில் இலங்கை
விவகாரம் தொடர்பான ஐக்கிய நாடுகளின் விசாரணைக் குழுவின் விசாரணை அறிக்கையும்
சமர்ப்பிக்கப்படவுள்ளது.
இந்நிலையில், மனித உரிமைப் பேரவையில்
சமர்ப்பிக்கப்படவுள்ள அறிக்கைக்கு எதிராக மக்களின் ஆணையை மார்ச் மாதத்தில்
ஜனாதிபதி தேர்தலை நடத்துவதன் மூலம்பெற முடியும் என்று அரசாங்கம் கருதலாம். இதன்
காரணமாக மார்ச் மாதத்தில் தேர்தல் நடத்தப்படுவதற்கே சாத்தியம் அதிகம் உள்ளதாக
தகவல்கள் தெரிவிக்கின்;றன.
நடைபெறப்போகும் ஜனாதிபதி தேர்தலில் தாமே வெற்றிபெறப் போவதாக
ஜனாதிபதி தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சிகள் ஜனாதிபதி வேட்பாளராக யாரை நிறுத்துவது
என்பது தொடர்பில் தீவிரமாக ஆராய்ந்து வருகின்றன.
இந்நிலையில், முஸ்லிம் காங்கிரஸ் ஜனாதிபதி
தேர்தலில்; யாருக்கு ஆதரவு அளிக்கும்
என்பதை முஸ்லிம் மக்கள் அறிய ஆவலாக உள்ளனர். அளுத்கம, பேருவளை சம்பவம் முழு நாட்டு
முஸ்லிம் மக்களையும் பெரிதும் பாதித்துள்ளது. அதற்காக அவர்கள் தேர்தலில்
வாக்குகளால் பதில் அளிக்க காத்துக் கொண்ருக்கிறார்கள். அரசாங்கத்திற்கும் அது
தெரியும். பௌத்த மக்களின் வாக்குகளையே
அரசு நம்பியிருக்கிறது. சிறுபான்மை மக்களின் வாக்குகளை அரசு பெரிதும்
எதிர்பார்க்கவில்லை. அதன் காரணமாகவே, பொதுபல சேனா உட்பட
பேரினவாத அமைப்புக்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க அரசு அஞ்சுகிறது.
இந்நிலையில், முஸ்லிம் காங்கிரஸ் தலைவர்
அமைச்சர் ஹக்கீம் அளுத்கமை, பேருவளை, தர்கா நகர் போன்ற இடங்களில்
இடம்பெற்ற இன வன்முறை சம்பவங்கள் தொடர்பாக அரசாங்கத்தை கடுமையாக சாடியுள்ள விடயம்
மற்றும் இது தொடர்பாக உள்ள முஸ்லிம்
நாட்டு தூதுவர்கள் பலரை சந்தித்து
கூறியுள்ள விடயங்கள் வரவேற்கத்தக்கதே. அதேபோன்று அமைச்சர் பாராளுமன்றத்திலும் இந்த
வன்முறை சம்பவத்தில் கொல்லப்பட்டவர்கள்
தொடர்பாகவும் குரல் எழுப்பியுள்ளார். அமைச்சர் ஹக்கீம் இந்த சம்பவம்
தொடர்பாக தொடர்ந்து உறுதியுடன் இருந்து செயற்பட வேண்டும். அதற்கான கட்டாயமும் அவருக்கு உள்ளது. இல்லையேல்,
அடுத்து வரும்
தேர்தல்களில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் வாக்கு வங்கியில் பெரும் வீழ்ச்சி
ஏற்படும் என்பது உறுதி.
இNதுவேளை,
அளுத்கமை, பேருவளை வன்முறைச் சம்பவங்கள்
முஸ்லிம் அரசியல்வாதிகள் பலரின் சுய முகங்களை நன்கு வெளிப்படுத்திக் காட்டியுள்ளன.
சிலர் இந்த சம்பவத்தை தமது அரசியல் இலாபத்திற்கு பயன்படுத்தி வருகின்றமையும், இன்னும் ஒரு சிலர் இந்த
சம்பவம் வெளிநாட்டு சக்திகளின் சூழ்ச்சி என்று கூறி அரசாங்கத்திற்கு சாமரம்
வீசியதையும், இன்னும் சிலர் எதுவுமே
கூறாமலும் எதுவுமே செய்யாமலும்
இருந்தமையும் காணக்கிடைத்தன.
விரல் விட்டு எண்ணக் கூடிய ஒரு சில முஸ்லிம் அரசியல்வாதிகளே
துணிந்து கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பில்; முஸ்லிம்களின் எதிர்ப்பை வெளிக்காட்ட ஹர்த்தாலை ஏற்பாடு
செய்தனர். வேறு சில ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளையும் மேற்கொண்டனர்.
இந்த வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக ஊடகங்களுக்கு அறிக்கைவிடுவதையம், கருத்து தெரிவிப்பதையும்
மேடைகளில் பேசுவதையும் போன்று சகல முஸ்லிம் பிரதிநிதிகளும் ஆக்கப்பூர்வாமாக
நடவடிக்கை எடுக்க ஒன்றிணைய வேண்டும். கட்சி பேதங்களை மறந்து, சுய இலாபங்களை துறந்து
ஒன்றுபட்டு நடவடிக்கை எடுப்பதன் ஊடாக
எதிர்காலத்தில் இது போன்று வன்முறைகள் ஏற்படாமல் தடுக்க உறுதியான அரணை
அமைக்க முடியும்.
'ஒற்றமை எனும் கயிற்றைப் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள் அதுவரை நீங்கள் வழி
தவறமாட்டீர்கள்' என்று இஸ்லாம் கூறுகிறது.
இதனை முஸ்லிம் தலைவர்கள் அனைவரும் உணர்ந்து அதன்படி ஒழுக வேண்டும.; இல்லையேல் முஹம்மத்
நபியவர்கள் காட்டித் தந்த வழியில் நடந்தவர்களாக ஆகமாட்டோம்.
நாங்கள் தற்போது
ரமழான் மாத்தில் இருக்கிறோம். புனித நோன்பை நோற்கிறோம். ஹிஜ்ரி இரண்டாம் ஆண்டில்
ரமழான் மாதம் நோன்பு 17ஆம் நாளில்தான் 'பத்ர்' யுத்தம் இடம்பெற்றது.
முஸ்லிம்களுக்கும் மக்காவின் குறைஷிக் காபிர்களுக்கும் நடந்த அந்தப் பேரில் நபிகள்
நாயகம் (ஸல்) அவர்களின் தலைமையில் போர் புரிந்த முஸ்லிம்கள் வெற்றி பெற்றனர்.
இதில் எமக்கு படிப்பினை இருக்கிறது.
பத்ர் யுத்த களத்தில் முஸ்லிம் வீரர்;களின் எண்ணிக்கை 313 பேராகும். குறைஷிக்
காபிர்களின் எண்ணிக்கை 1000 பேராகும். இது தவிர குறைஷிக் காபிர்களின் ஆயுதப் பலமும்
குதிரை பலமும் ஒட்டகங்களின் பலமும் மித அதிகமாக இருந்தது. ஆயினும், அந்த பத்ர் களத்தில் சிறிய
படை பெரும் படையை இறைவன் உதவியோடு வெற்றி
கொண்டது.
இந்தப் போர் இறைவன்
எந்த சமயத்திலும் சத்தியத்திற்காக போராடுபவர்களுக்கு உதவி வழங்குகிறான் என்ற
உண்மையினை உறுதிப்படுத்துகிறது. அந்த நபித் தோழர்கள் இறைவன் மீது அசையாத
உறுதியுடனும், மனவலியுடனும் போரிட்டார்கள்.
முஸ்லிம் மக்களுக்கு எதிராக அன்று மக்;கத்து எதிரிகள் மேற்கொண்ட
சூழ்ச்சிகளும், படையெடுப்பும் உண்மையுடனும்
உறுதியான இறை நம்பிக்கையுடனும் வாழ்ந்த
முஸ்லிம்களை வெற்றி கொள்ள முடியவில்லை. அந்த பத்ர் போரில் சத்தியம்
ஜெயித்தது. அசத்தியம் தோற்றது.
எனவே,
ஒற்றமை எனும்
கயிற்றைப் பற்றிப் பிடித்துக் கொண்டு இஸ்லாம் காட்டித் தந்துள்ள வழியில் நமது
தலைவர்கள் செயற்பட்டால் எமது எதிரிகளின்
சூழ்ச்சிகள் படு தோல்வி அடைவது திண்ணம்.
இதேவேளை,
திபெத்தின் ஆன்மீகத்
தலைவர் தலாய் லாமா கூறியுள்ளதையும் இங்கு சுட்டிக்காட்ட வேண்டும்.
தமது 79ஆவது பிறந்த நாளை முன்னிட்டு
இந்திய காஷ்மீரில் உள்ள இடம் ஒன்றில் வைத்து ஆயிரக்கணக்கான தமது ஆதரவாளர்கள்
மத்தியில் தலாய் லாமா உரையாற்றிய போது, இலங்கை மற்றும் மியன்மாரில்
முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் தடுக்கப்பட வேண்டும் என்று வேண்டுகோள்
விடுத்துள்ளதோடு, கௌதம புத்தர் இருந்தால்
பௌத்தர்களின் அடக்குமுறைகளிலிருந்து முஸ்லிம்களை காப்பாற்றியிருப்பார் எனவும்
தெரிவித்துள்ளார்.
பெரும்பான்மை பௌத்தர்கள் வாழும் நாடுகளில் முஸ்லிம் மக்கள்
மீது கட்டவிழ்த்து விடப்படும் வன்முறைகளை ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்துள்ள
தலைலாமா,
முஸ்லிம்களுக்கு
எதிரான வன்முறைகளை மேற்கொள்ள முன்னர் புத்த பெருமானை இவர்கள் நினைவு கூற வேண்டுமென
அவர் வலியுறுத்தியுள்ளதோடு, கௌதம புத்தர்
இருந்தால் பௌத்தர்களின் அடக்கு முறைகளிலிருந்து முஸ்லிம்களை காப்பாற்றியிருப்பார்
எனவும் கூறியுள்ளார்.
பல இனங்களையும் பல மதங்களையும்; சேர்ந்த மக்கள் வாழுகின்ற
எமது நாட்டில் அரசியல் தலைவர்கள் பலரும், சமயத் தலைவர்கள்
சிலரும் அவர்களது சமயம் கூறுகின்ற வழியில் வாழாமல் அதற்கு மாற்றமாக வாழ்வதும்.
மனித உரிமைகளை மீறுகின்ற செயல்களை புரிவதும் நாட்டில் இன, மத ரீதியில் பிரச்சினைகள்
ஏற்பட்டுள்ளமைக்கு பிரதான காரணங்களாக
அமைந்துள்ளன.
மேற்குலகம் எமது நாட்டில் சட்ட ஆட்சி இல்லை என்ற
குற்றச்சாட்டை முன்வைக்கிறது. அதேபோன்று, எமது நாட்டு அரசியல்
தலைவர்களில் பெரும்பாலானவர்களும் சமயத் தலைவர்களில் சிலரும் அவரவர்களின் சமயங்கள்
கூறுவதற்கு மாற்றமாக நடக்கின்றனர் என்று எமது நாட்டவர்களே இன்று சுட்டுவிரலை நீட்டுகின்றனர்.
கடந்த மாதம் கண்டியில் இரவு நேர கார் ஓட்டப் பந்தயம்
இடம்பெற்றது. இந்த கார் ஓட்டப் பந்தயத்தை கண்டியில் நடத்த வேண்டாம் என்று மகா
நாயக்க தேரர்கள் கேட்டிருந்தனர். ஆயினும், பந்தயம் நடைபெற்றது.
புனித மண்ணில்;;
கார் ஓட்டப் பந்தயம்
இடம்பெற்றதையும், பௌத்த மதத் தலைவர்களின்
வேண்டுகோள் ஏற்றுக் கொள்ளப்படாததையும்
கண்டு கொள்ளாத பொதுபல சோனா உட்பட அதன் வழி நடக்கும் பேரினவாத அமைப்புக்கள்
மற்றும் அரசியல் தலைவர்கள் முஸ்லிம்கள் மீதும் கிறிஸ்தவர்கள் மீதும்
அடாவடித்தனங்கள் புரிவது அவர்களின் சுயலாபம் கருதியே அன்றி. பௌத்த மதத்தை
காப்பாற்றுவதற்காக அல்ல.
முஸ்லிம் அரசியல்வாதிகளே! நீஙகள் எல்லோரும் ஒன்று சேர்ந்து முஸ்லிம் மக்களை
காப்பாற்ற புறப்படுவது எப்போது?
No comments:
Post a Comment