(தமிழ்த் தந்தி பத்திரிகை 7-9-2014)
ஊவா
தேர்தலில் அரசாங்கத்துக்கு நாம் அதிர்ச்சி வைத்தியம் கொடுக்க வேண்டும். அரசாங்கம்
முஸ்லிம்களை கண்டுகொள்ளவில்லை என்பதை அரசு சார்பில் முஸ்லிம் வேட்பாளர்
ஒருவரையேனும் களமிறக்கப்படாததை வெளிக்காட்டியுள்ளது. இதனை மறைக்கவே தற்போது எமது
கூட்டமைப்பு அவர்களின் கடிவாளம் கைக்கூலிகள் என கூறி வருகின்றனர். இவையெல்லாம்
முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது. ஊவா முஸ்லிம்கள் நன்றாக சிந்தித்து செயல்பட
வேண்டும் அரசாங்கம் சார்பில் எந்தவொரு முஸ்லிம் வேட்பாளர்களும்
களமிறக்கப்படாமையானது ஊவா வாழ் முஸ்லிம்களை புறந்தள்ளியிருப்பதை தெட்டத் தெளிவாக
வெளிப்படுத்தியுள்ளது. எனவே நடைபெறவுள்ள ஊவா மாகாண சபை தேர்தலில் அனைவரும்
ஒன்றிணைந்து அரசுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுக்க வேண்டும் என்று பதுளையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில்
மு.கா. தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.